தனது டிரைவரின் மகளின் 'ஹனிமூன்' செலவை ஏற்ற நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்
மும்பை: இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் தனது கார் டிரைவரின் மகள் தேனிலவுக்கு துபாய் செல்ல பணம் கொடுத்துள்ளார்.
நடிகர், நடிகைகள் தங்களிடம் வேலை செய்பவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பேசுவது அவர்களுக்கு உதவி செய்வது அதிகரித்து வருகிறது. அஜீத் குமார் தன்னிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார்.
இந்நிலையில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் தனது டிரைவரின் மகளுக்கு உதவி செய்துள்ளார்.

டிரைவர்
ராம் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஜாக்குலின் பெர்ணான்டஸிடம் கார் டிரைவராக உள்ளார்.

திருமணம்
ராம் பாபுவின் மகளுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. புதுமணத் தம்பதிக்கு ஜாக்குலின் பரிசுப் பொருளாக எதையும் அளிக்க விரும்பவில்லை. மாறாக வேறு ஏதாவது செய்ய விரும்பினார்.

தேனிலவு
ராம் பாபுவின் மகளும், மருமகனும் துபாயில் தேனிலவு கொண்டாடுவதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் ஜாக்குலின். அவர்கள் ஒரு வாரம் துபாயில் தங்கி தேனிலவை கொண்டாடுகிறார்கள்.

மகிழ்ச்சி
என் மகளுக்கு துபாய் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்நிலையில் மேடம் என் மகள் துபாயில் தேனிலவு கொண்டாட பண உதவி செய்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ராம் பாபு.

சல்மான்
சல்மான் கானும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. சல்மானும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு உதவ தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











