சென்னை எக்ஸ்பிரஸில் ஷாருக்கானுடன் குத்தாட்டம் போடும் பிரியாமணி
மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக ஷாருக்கானுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார் பிரியாமணி.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கும் காமடெி படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் தீபிகா தமிழ் பெண்ணாக வருகிறார். பாலிவுட் படங்களில் குத்துப் பாட்டு என்பது கட்டாயமான ஒன்றாகிவிட்டது. அப்படி இருக்கையில் சென்னை எக்ஸ்பிரஸில் மட்டும் குத்துப் பாட்டு இல்லாமலா. குத்துப்பாட்டுக்கு ஆட பாலிவுட் நடிகைகள் ஆதிக ஆர்வமாக இருக்கையில் இந்த படத்தில் தென்னிந்திய நடிகையைத் தான் ஆட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
யாரை ஆட வைக்கலாம் என்று யோசித்து பின்னர் நயன்தாராவிடம் கேட்டனர். அவரோ இல்லை பாஸ், என்னால் முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து அந்த வாய்ப்பு பிரியாமணிக்கு சென்றுள்ளது.

பிரியாமணி
பிரியாமணி ஷாருக்குடன் ஆடும் பாடலுக்கு ராஜு சுந்தரம் தான் டான்ஸ் மாஸ்டர்.

நயன் நோ சொன்னதால் வந்த வாய்ப்பு
இந்த குத்துப்பாட்டுக்கு ஆட நயன் மறுத்ததையடுத்து சமந்தா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபட்டுள்ளது. இறுதியில் தேர்வானது பிரியாமணி.

ஏற்கனவே பாலிவுட் போனவர்
பிரியாமணி மணிரத்னத்தின் ராவண் மற்றும் ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ரா ஆகிய 2 இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











