2 முறை மரணத்தின் வாயிலை தொட்டுவிட்டு திரும்பிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மரணத்தின் வாயிலை இரண்டு முறை தொட்டுவிட்டு வந்துள்ளார்.
நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ப்ரீத்தி பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

13 வயது
ப்ரீத்திக்கு 13 வயது இருக்கையில் அவரது தந்தையும், ராணுவ வீரருமான துர்கானந்த் ஜிந்தா கார் விபத்தில் பலியானார். அதே விபத்தில் படுகாயம் அடைந்த ப்ரீத்தியின் தாய் நீல்பிரபா படுத்தபடுக்கையானார்.

ப்ரீத்தி
2004ம் ஆண்டில் ப்ரீத்தி இரண்டு முறை உயிர் தப்பியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோதும், தாய்லாந்தை சுனாமி தாக்கிய போதும் ப்ரீத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மத நம்பிக்கை
ப்ரீத்தி எந்த மதத்தையும் பின்பற்றுபவர் அல்ல. எனக்கு கர்மா மீது நம்பிக்கை உள்ளது. கோவிலுக்கு செல்வதில் நம்பிக்கை இல்லை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம் என்று ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

விருது
நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு வைத்ததாக கூறி சோரி சோரி சுப்கே சுப்கே படத் தயாரிப்பாளர் பரத் ஷா கைது செய்யப்பட்டார். இந்த படத்தை நிழல் உலக ஆட்கள் தான் தயாரித்ததாகவும் அவர்கள் நடிகர், நடிகைகளை மிரட்டி நடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த படத்தில் நடித்து வந்த ப்ரீத்தி நிழல் உலக ஆட்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவித்தார். தாதாக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறிய அவருக்கு காட்ஃப்ரே ஃபிலிப்ஸ் நேஷனல் பிரேவரி விருது கிடைத்தது.


Click it and Unblock the Notifications











