காதலை சொன்ன நடிகர்: லூசா நீ என்று கேட்ட வாரிசு நடிகை
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தன் காதலை சொன்னதும் பைத்தியமா என்று கேட்டுள்ளார் நடிகை கரீனா கபூர்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு 2 வயதில் தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கரீனா கபூர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

சயிப் அலி கான்
தஷான் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாங்கள் கிரீஸ் சென்றிருந்தோம். அங்கு ஒரு பாடலை படமாக்கினார்கள். ஒரு நாள் காலை எழுந்தவுடன் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று சயிப் அலி கான் என்னிடம் தெரிவித்தார்.

கிரீஸ்
கிரீஸிலேயே திருமணம் செய்யலாம். உடனே ஒரு தேவாலயத்திற்கு சென்று திருமணம் செய்யலாம் என்றார் சயிப். உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நான் கேட்டேன். அதற்கு அவரோ அதெல்லாம் தெரியாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று மட்டும் கூறினார்.

விவாகரத்து
சயிப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், 2 பிள்ளைகளுக்கு தந்தை என்பதால் அவரை திருமணம் செய்ய நான் தயங்கவில்லை. என் குழந்தைகள் தான் என் குடும்பம். அவர்கள் என்னுடன் தான் இருப்பார்கள். எனக்கு மிகவும் முக்கியமானவர்கள் அவர்கள் தான் என்று சயிப் என்னிடம் ஏற்கனவே கூறிவிட்டார்.

சிறப்பு
நான் சயிபை தீவிரமாக காதலித்தேன், காதலிக்கிறேன், காதலிப்பேன். அவர் மீதான காதல் மட்டும் என்றுமே குறையாது. நான் அவரை திருமணம் செய்தது தான் என் வாழ்வில் நான் எடுத்த சிறந்த முடிவு என்று கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











