போல்டான நடிகை என்றால் பைக் ஓட்டணும்.. இதுதான் இந்திய சினிமா.. விழுந்த கதையை சொன்ன ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

சென்னை: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், பைக் ஓட்ட தெரியாமல், தான் விழுந்த கதையை வீடியோ வெளியிட்டு சொல்லி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

காற்று வெளியிடை படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமானார்.

ரசிகர்களை ஈர்த்த யாஞ்சி

ரசிகர்களை ஈர்த்த யாஞ்சி

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அனிருத் குரலில் வெளியான "யாஞ்சி.. யாஞ்சி" பாடல் வேற லெவலில் ஹிட் அடிக்க, தமிழ் ரசிகர்கள் மனங்களில் நிலையான இடத்தை பிடித்து விட்டார் ஷ்ரத்தா.

போல்டான நடிகை

போல்டான நடிகை

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் செம போல்டான ரோலில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தில் டாப்ஸி நடித்து அனைத்து பாராட்டுக்களையும் அள்ளிய ரோலில் தமிழில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சக்ரா

சக்ரா

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி படத்தில் சிறப்பான ரோலில் நடித்து பிரபலமான இவர், தற்போது ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் சக்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் இருந்து சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மாதவனுடன்

மீண்டும் மாதவனுடன்

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக செம கெமிஸ்ட்ரியுடன் நடித்திருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக ‘மாறா' படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான துல்கர் சல்மானின் சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா படத்தில் பார்வதி நடித்த ரோலில் ஷ்ரத்தா நடித்து வருகிறார்.

பைக்கில் இருந்து விழுந்தேன்

பைக்கில் இருந்து விழுந்தேன்

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நந்தி ஹீல்ஸில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில், போல்டான கதாபாத்திரம் என்பதால், தனக்கு புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டனர். நான் ஸ்ட்ரெய்ட்டா, எனக்குத் தெரியாது எனக் கூறினேன். ஆனால், பைக்கை எப்படி ஓட்டுவது என்ற பயிற்சி எனக்கு வழங்கப்பட்டது.

இந்திய சினிமாவில்

இந்திய சினிமாவில்

பின்னர், பைக்கை ஓட்டும் போது எப்படி விழுந்தேன் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்கிற ரீதியில் ஒரு போஸ்ட்டை போட்டு வைரலாக்கி உள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

பைக் நல்லாருக்கான்னு பார்த்தாங்க

பைக் நல்லாருக்கான்னு பார்த்தாங்க

இதில் கொடுமை என்னவென்றால், அந்த புல்லட்டில் இருந்து நான் கீழே விழுந்த நிலையில், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை, புல்லட்டுக்கு எந்த சேதமும் ஆகவில்லையா என்பதை தான் அனைவரும் பார்த்தார்கள் என்பதை கூறிவிட்டு, ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்ளோ வெயிட்டா இருக்கு என பதிவிட்டுள்ளார். கோமாளி நடிகை சம்யுக்தா அதனை தனது கமெண்டில் போட்டு சூப்பர் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X