இந்த நடிகை பட வாய்ப்பை ஏன் இழந்தார் என்று தெரிந்தால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க

By Siva

மும்பை: பார்க்க அறிவாளியாக தெரிவதால் ஸ்வரா பாஸ்கர் பட வாய்ப்பை இழந்துள்ளார்.

மனதில் பட்டதை தைரியமாக பேசுவதற்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் பற்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

லுக்

லுக்

நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வரும் அனைவருமே அவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள் என்பதற்காக நிராகரிக்கப்படும் சம்பவம் நடக்கிறது. இல்லை என்றால் நடிகர், நடிகைகள் ஏன் மேக்கப்புக்கு அவ்வளவு பணம் செலவு செய்யப் போகிறார்கள். சினிமா துறையில் அழகும், லுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

மும்பை

மும்பை

நான் நடிக்கும் ஆசையில் மும்பை வந்த போது ஒரு இயக்குனரை சந்தித்தேன். அவரோ நீ பார்க்க அறிவாளி மாதிரி தெரிகிறாய் அதனால் உன்னை என் படத்தில் நடிக்க வைக்க முடியாது என்றார். அவர் சொன்னது எனக்கு இந்நாள் வரை புரியவில்லை. இது போன்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்துவது நமக்கு நல்லது.

பெண்

பெண்

அனுஷா போஸ் இயக்கத்தில் நான் நடித்துள்ள ஷேம் படம் ஒரு நல்ல பெண் அவரின் லுக்கிற்காக எப்படி அசிங்கப்படுத்தப்படுகிறார் என்பதை சொல்கிறது. பெண்கள் தங்களின் லுக்கிற்காக அடிக்கடி அவமானப்படுத்தப்படுவதையே இந்த படத்தில் காட்டியுள்ளோம். கலைஞர்கள் தங்களின் கற்பனை திறனை வெளிப்படுத்த டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உதவியாக உள்ளது.

சினிமா

சினிமா

நல்ல கதை தான் எனக்கு முக்கியம். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன். என் திரையுலக வாழ்வில் நான் நல்ல கதைக்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். இதுவரை என்னை தேடி நல்ல நல்ல கதைகள் வந்துள்ளன என்று ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X