தோழி நயன்தாராவுடன் த்ரிஷா பார்ட்டியோ பார்ட்டி
சென்னை: த்ரிஷா தனது தோழியான நயன்தாராவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார்.
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் சீனியர் நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் இளம் ஹீரோக்கள் விரும்பி ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் தோழிகள் சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.

பார்ட்டி
நேற்று இரவு த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் சந்தித்து பொழுதை கழித்துள்ளனர். இதை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நேற்றைய இரவு காவிய இரவு என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

தோழிகள்
பழைய தோழிகள் ஒன்று சேர்ந்து பொழுதை கழிப்பது போன்ற சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது கதிர்வேலன் காதல்
கடந்த ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த நயன்தாரா நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தன்று ரிலீஸாகிறது.

பூலோகம்
கடந்த ஆண்டு என்றென்றும் புன்னகை என்ற வெற்றிப் படத்தில் நடித்த த்ரிஷா ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ள பூலோகம் விரைவில் ரிலீஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











