அதை மட்டும் செஞ்சா.. உங்க அமைதியை யாராலும் பறிக்க முடியாது.. யோகாவில் மூழ்கிப் போன இஷா குப்தா!
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா, யோகா டீச்சராகவே மாறி வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். தற்போது, அவர் யோகா புகைப்படத்துடன் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய நீண்ட பதிவையும் பதிவிட்டுள்ளார்.
இஷா குப்தாவின் யோகாசனங்கள் என புத்தகமே போடும் அளவுக்கு இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட வித்தியாசமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில், 5 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் அடைந்துள்ளதையும் இஷா குப்தா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மூச்சை கட்டுப்படுத்துதல்
யோகா முறைகளிலேயே மூச்சைக் கட்டுப்படுத்தும் பத்மாசனம் மிகவும் சிறந்த ஒன்றாகும். அப்படி ஒருவர் தனது மூச்சை கட்டுப்படுத்தி விட்டால் அவரது அமைதியை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது என்ற தத்துவத்துடன் யோகா செய்யும் புகைப்படத்தை நடிகை இஷா குப்தா பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

தனி வழி
சமூகத்தில் மற்றவர்கள் நடந்து செல்லும் பாதையை பின்பற்றியே நீங்களும் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கென ஒரு தனி பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவை என்பது மன அமைதி என்ற ஒன்று மட்டும் தான். கடந்த சில ஆண்டுகளாக எனது வாழ்வில் அடுத்தவர்கள் ஆட்சி செய்து மன அமைதியை குழைத்தனர்.

நண்பர்களாக நடிப்பார்கள்
அதில் சிலர் நண்பர்களாகவே நம்முடன் பழகி நம்மை ஏமாற்றுவார்கள். ஆனால், நாம் தான் முழு எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும், யார் நம்மை உற்சாகப்படுத்துவார்கள், நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையும், யார் நமது தோல்வியை குறித்து சந்தோஷப் படுகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கவலை வேண்டாம்
அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை முதலில் உங்கள் ஆழ் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். உங்களை பற்றி நீங்கள் சிந்திப்பது ஒருபோதும் சுயநலமாகாது. அடுத்தவர்களுக்கு நீங்கள் தீங்கு ஏதும் செய்யாமல் நல்ல முறையில் உங்கள் வாழ்க்கையை நடத்தி செல்லுங்கள், மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை செவி கொடுத்து கேட்டீர்கள் என்றால் மன அமைதி கெட்டுவிடும் என நடிகை இஷா குப்தா ஒரு தத்துவ ஞானியாகவே மாறி இந்த பதிவை போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications