For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்கே எங்கள் நமீதா??... ஏக்கத்தி்ல ரசிகர்கள்!

  By Sudha
  |

  நமீதா முகேஷ் வெங்கவாலா... என்று சொல்லிப் பாருங்கள்... உதடுகள் ஒட்டாது... ஆனால் நமீதா என்று மட்டும் சொல்லிப் பாருங்கள், உதடுகளோடு உள்ளமும் சேர்ந்து ஒட்டும்.. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னகத் திரைவானில் எரி நட்சத்திரமாக ஜொலித்தவர் நமீதா...

  மச்சான்ஸ் என்ற ஒற்றைச் சொல்லால்.. தமிழ் ரசிக நெஞ்சங்களை பற்றி எரிய வைத்தவர்... கவர்ச்சியில் பட்டாசாகப் பொறிந்தவர்..

  இப்போது நமீதாவைக் காண முடிவதில்லை ரசிகர்களால். டிவி ஷோவோடு செட்டிலாகி விட்ட நமீதாவின் நினைவாக வாடி வதங்கிப் போய் விட்ட ரசிகர்களுக்காக ஒரு சின்ன 'ஆல்பம்' இது....

  ஆசையைக் காத்துல தூது விட்டு...

  ஆசையைக் காத்துல தூது விட்டு...

  98ல் சூரத்தை தாக்கியது ஒரு அழகுப் புயல்...ஆம், அந்த ஆண்டுதான் மிஸ் சூரத்தாக தேர்வாகி அந்த ஊர் இளைஞர்களை தூங்க விடாமல் தவிக்க விட்டார் நமீதா...

  இள நெஞ்சே வா...

  இள நெஞ்சே வா...

  சூரத்தின் சுந்தரியாக தேர்வான பின்னர் நமீதாவைப் பார்த்து நாடே திரும்பியது... அருண் ஐஸ்கிரீம், மாணிக்சந்த் குத்கா, ஹிமானி கிரீம் என அத்தனை விளம்பரதாரர்களும் நமீதாவை நோக்கி கை நீட்டி வரவேற்று கேமரா பக்கம் நமீதாவைத் திருப்பினர்.

  சொந்தம் வந்தது வந்தது...

  சொந்தம் வந்தது வந்தது...

  நமீதாவின் எழுச்சி என்றால் அது தெலுங்கில் வெளியான சொந்தம் படம்தான். அதுதான் அவரது முதல் படமும் கூட. இந்தப் படத்தை முடித்த கையோடு தமிழுக்கு வந்து சேர்ந்தார் நமீதா... அதுதான் ஏய்...

  ஆடி ஆத்தாடி...

  ஆடி ஆத்தாடி...

  அதன் பிறகு நமீதாவை பார்த்துப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தது தமிழ் ரசிகர் கூட்டம்...

  தில்பரு ஜானே...தித்திக்கிறே தேனே

  தில்பரு ஜானே...தித்திக்கிறே தேனே

  படத்தில் ஹீரோ இருக்காரோ அல்லது கதை இருக்கிறதோ இல்லையோ.. கண்டிப்பாக நமீதா இரு்நதால் ஜெயிச்சுரலாம் என்ற நம்பிக்கை டைரக்டர்களுக்கு வர ஆரம்பித்து விட்டது. அப்படிஒரு கிரேஸ்...நமீதாவுக்கு.

  ஏதோ மோகம்..ஏதோ தாகம்...

  ஏதோ மோகம்..ஏதோ தாகம்...

  டான்ஸ் வராது, நடிப்பு வராது...ஆனாலும் நமீதா மீது ஏதோ ஒரு மோகம் ரசிகர்களுக்குப் பிறந்தது.

  கண்ணில் ஏதோ...

  கண்ணில் ஏதோ...

  நமீதாவின் கண்களும், கவர்ச்சியும் விருந்தாக திரையில் படைக்கப்பட்டதைப் பார்க்க அலை மோதிய கூட்டம் .. அது ஒரு காலம்....நமீதாவின் கனாக்காலம்...

  மச்சானைப் பாரடி...

  மச்சானைப் பாரடி...

  எப்படி சிவாஜி தனது ரசிகர்களை பிள்ளைகளே என்று அழைத்தாரோ அதுபோல நமீதா தனது ரசிகர்களை மச்சான்ஸ் என்று ஆசையுடன் அழைத்தார். ஆனால் நமீதாவி்ன் முதல் மச்சான்ஸ் அவரை பிரபலப்படுத்திய ஷக்தி சிம்பரம்தான்.. அதாவது அவரைத்தான் முதன் முதலில் அவர் மச்சான்ஸ் என்று அழைத்தாராம். இன்னும் கூட அதை பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார் ஷக்தி.

  இளமை எனும் பூங்காற்று...

  இளமை எனும் பூங்காற்று...

  நமீதா நடிக்க வந்ததும் ஹீரோயின்கள் போக தனியாக குத்துப் பாட்டுக்கு ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. காரணம், நமீதா எனும் பூங்காற்றே கவர்ச்சிப் புயலாக மாறி குத்துப் பாட்டிலும் கலக்கியதால் டைரக்டர்களுக்கு ஒரே கல்லில் பல மாங்காய் என்ற சந்தோஷ சிச்சுவேஷன்...

  ஒளியிலே தெரிவது தேவதையா...

  ஒளியிலே தெரிவது தேவதையா...

  ஆனால் கவர்ச்சிப் புயல் மட்டும்தானா நமீதா என்று கேட்டால் இல்லை என்றும் சொல்லலாம்... காரணம், அழகான நடிப்பையும் சில படங்களில் அவர் கொடுத்துள்ளார்...

  பொன் மானே கோவம் ஏனோ...

  பொன் மானே கோவம் ஏனோ...

  சமீப காலமாக நமீதாவை தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. என்ன கோபமோ, என்னவோ.. டிவி ஷோக்களோடு நின்று விட்டார் நமீதா.... மீண்டும் மீண்டும் வா என்று அன்போடு அவரது ரசிகர்கள் கோரிக்கை வைப்பது நமீதாவின் காதுகளை சென்றடையுமா என்னவோ... தெரியவில்லை.

  இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்....

  இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்....

  இந்தக் கேள்விதான் ஒவ்வொரு நமீதா ரசிகர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வியாக இருக்க முடியும்.. படங்களில் முன்பு போல பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருக்கத்தானே செய்யும்.

  ராசாத்தி மனசுல...

  ராசாத்தி மனசுல...

  நமீதாவுக்கும் 32 வயதாகி விட்டது. தொடர்ந்து அவர் கலைச்சேவை புரிவது ரொம்பக் கஷ்டமானதுதான்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.. ராசாத்தி மனசுல என்ன இருக்கோ யாருக்குத் தெரியும்....

  English summary
  Where are you Namitha??
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X