எங்கே போனீர்கள் சனா...??
சனா கான்... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக வந்திருக்க வேண்டியவர்- வரத் தவறியவர். ஆனாலும் அழகானவர், வடிவானவர், இப்போது எங்கே போனார் என்றே தெரியவில்லை.
சிலம்பாட்டம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த சனா கான் முதல் படத்திலேயே அசத்தினார். மாடல் அழகியாக மும்பையில் வலம் வந்து கொண்டிருந்த சனா தமிழ்த் திரையுலகம் மூலமாக நடிகையாகி ஒரு ரவுண்டு வந்தவர்.
ஆனால் தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வரத்தவறின. அவரும் சீரியஸாக எதையும் முயற்சித்ததாக தெரியவில்லை. இப்போது சனா எங்கிருக்கிறார்.. மீண்டும் நடிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

சின்ன வயசிலேயே மாடலிங்
மிகவும் இளம் வயதிலேயே மாடல் அழகியாக மாறியவர் சனா கான். பள்ளிப் படிப்பை முடித்ததுமே மாடலிங்கில் குதித்த அவர் மும்பையின் முன்னணி நாடல் அழகியாக ரவுண்டு கட்டியவர்.

ஈ படத்தில் சின்ன ரோல்
தமிழில் அவர் நடித்த முதல் படம் சிலம்பாட்டம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜீவா, நயனாரா நடித்த ஈ படம்தான் சனாவுக்கு முதல் படம். அதில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார் சனா.

சிலம்பாட்டத்தில் சிறந்த நடிகை
சிலம்பாட்டம் படம்தான் ஹீரோயினாக சனாவுக்கு முதல் தமிழ்ப் படம். இதில் அவரது நடிப்புக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் கிடைத்தது.

பரத்துடன்
அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத்துடன் இணைந்து தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடித்தார். படமும் ஓடவில்லை. சனாவும் பேசப்படவில்லை.

பிரகாஷ்ராஜுடன் பயணம்
தொடர்ந்து பிரகாஷ் ராஜின் பயணம் படத்தில் சனாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனாலும் பட வாய்ப்புகள்தான் தொடரவில்லை.

சாந்தனுவுடன் ஆயிரம் விளக்கு
சாந்தனுவுடன் ஆயிரம் விளக்கு படத்திலும் நடித்தார் சனா. இப்படமும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. இப்போது தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சனா. பட வாய்ப்புகளே இல்லாமல் போனாலும் குத்தாட்டத்திலோ, அதீத கவர்ச்சியிலோ நடிப்பதில்லை என்பதை பாலிசியாகவே வைத்திருக்கிறாராம் சனா.

கை கொடுப்பாரா 'சில்க்'?
தற்போது மலையாளத்தில் கிளைமேக்ஸ் என்ற படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துள்ளார் சனா கான். இப்படம் அவருக்கு பெரும் பிரேக்காக அமையும் என்று பேசி வருகிறார்கள்.
பார்க்கலாம்....!


Click it and Unblock the Notifications











