போலீஸ் உடையில் அசத்திய கதாநாயகிகள்
நடிகைகளுக்கு மனநலம் குன்றியவராகவோ, பாலியல் தொழிலாளியாகவோ நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதேபோல கதாநாயகர்கள் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
கதாநாயகிகள் சிலருக்கும் காக்கி யூனிபார்ம் மீது காதல் இருக்கும். ஆனால் போலீஸ் உடை எல்லா நாயகிகளுக்கும் சரியாக அமைந்துவிடாது சிலருக்கு மட்டுமே கச்சிதமாக அமையும்.
கவர்ச்சியான நாயாகியாக நடித்த சில நடிகைகள் கூட காக்கி யூனிபார்ம் அணிந்த உடன் கம்பீரமாக மாறிவிடுவார்கள். அப்படி காக்கி உடையில் கலக்கிய நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

விஜயசாந்தி
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை என்றால் அது விஜயசாந்தி தான் என்ற எண்ணம் இன்றுவரையிலும் ரசிகர்களிடத்திலிருந்து அகலவில்லை. 80-களில் விஜயசாந்தி போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தது தான், இன்றுவரை எந்த நடிகையும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. வைஜெயந்தி ஐபிஎஸ் தொடங்கி பல படங்களில் அவர் அணிந்த காக்கி யூனிபார்ம் கம்பீரமாக பொருந்தியிருக்கும்.

அனுஷ்கா
யோகா டீச்சராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அனுஷ்கா. சகுனி படத்தில் சில காட்சிகள் காக்கி உடை அணிந்து நடித்திருப்பார்.

சிநேகா
வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தின் ரீமேக்கான பவானி படத்தில் சிநேகா காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் விஜயசாந்தியோடு ஒப்பிடும் போது சிநேகா சுமார்தான் என்பது ரசிகர்களின் கருத்து.

நமீதா
கவர்ச்சிப் புயலான நடித்த நமீதா, தேச துரோகி என்ற தெலுங்குப் படத்தில் காக்கி யூனிபார்ம் அணிந்து நடித்திருந்தார். அந்த உடை கூட அவருக்கு கம்பீரத்தை விட கவர்ச்சியாகத்தான் இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.

அனுயா
சிவா மனசுல சக்தி படத்தில் கதாநாயகியாக நடித்த அனுயா, மதுரை சம்பவம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அழகான அந்த நடிகைக்கு காக்கி யூனிபார்ம் கொஞ்சம் கம்பீரத்தை கொடுத்தது.

பாவனா
மலையாளப் படத்தில் பாவனா காக்கி யூனிபார்ம் அணிந்து காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.

அமலாபால்
ஜில்லா படத்தில் காஜல் அகர்வாலின் காக்கி உடை அணிந்து கம்பீரமாக நடித்திருக்கிறாராம்.

காஜல் அகர்வால்
ஜில்லா படத்தில் காஜல் அகர்வாலின் காக்கி உடை அணிந்து கம்பீரமாக நடித்திருக்கிறாராம்.

ரீமா சென்
தமிழ், தெலுங்கு, படங்களில் கவர்ச்சியாக நடித்த ரீமா சென் ‘சட்டம் ஒரு இருட்டரை' ரீமேக் படத்தில் காக்கி யூனிபார்ம் அணிந்து நடித்திருப்பார்.

ஹரிப்ரியா!
கனகவேல் காக்க என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கன்னட நடிகை ஹரிப்ரியா. அதன்பிறகு வல்லக்கோட்டை, முரண் படங்களில் நடித்தார். வாராயோ வெண்ணிலாவே படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











