புடுச்சாலும் புளியங்கொம்பாக புடுச்ச ஏமி: வருங்கால கணவரின் சொத்து மதிப்பு ரூ. 3,600 கோடி

By Siva

சென்னை: ஏமி ஜாக்சனை திருமணம் செய்யப் போகும் ஜார்ஜின் சொத்து மதிப்பு ரூ. 3,600 கோடி ஆகும்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை ஏமி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஏமி திருமணம் செய்யப் போகும் ஜார்ஜ் யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பது தெரிய வந்துள்ளது.

கோடீஸ்வரர்

கோடீஸ்வரர்

இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஆன்ட்ரியஸ் பனயியோட்டுவின் மகன் ஜார்ஜ். அவருக்கு காஸ்டாஸ் என்ற சகோதரர் உள்ளார். ஆன்ட்ரியஸினின் இரண்டாவது திருமணம் மூலம் ஜார்ஜுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

ரூ. 3600 கோடி

ரூ. 3600 கோடி

ஜார்ஜின் தந்தையின் சொத்து மதிப்பு ரூ. 3, 600 கோடி ஆகும். ஜார்ஜ் எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார். அவரின் குடும்பத்திற்கு சொந்தமாக பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் டன்பிளேன் ஹைட்ரோ, ஹில்டன் லிவர்பூல், ஹில்டன் கேம்பிரிட்ஜ், டபுள்ட்ரீ அபெர்டீன் ஆகிவை அடக்கம்.

மதிப்பு

மதிப்பு

ஜார்ஜ் குடும்ப நிறுவனத்திற்கு சொந்தமாக ஹோட்டல்கள், வனிக நிறுவனங்கள் என்று 7 ஆயிரம் சொத்துக்கள் உள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 2020ம் ஆண்டில் 2 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரிக்கும் என்று அவர்களின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்

ஜெட்

ஆன்ட்ரியஸுக்கு சொந்தமாக 40 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான கல்ப்ஸ்ட்ரீம் ஜி450 ஜெட், 12 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள மன்கஸ்டா 130 படகு, 2 செஸ்னா சைட்டேஷன் ஜெட்டுகள், ரேஞ்ச் ரோவர், ஃபெராரி என்சோ, லம்போர்கினி எல்பி700, ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் கன்வர்டிபிள், புகாட்டி வெரோன் ஆகிய கார்கள் உள்ளன.

சிறை

சிறை

2014ம் ஆண்டு மத்திய லண்டனில் பணியில் இருந்த போலீசாரை தாக்கி காயப்படுத்தியதாக ஜார்ஜ் மற்றும் காஸ்டாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜார்ஜுக்கு 6 மாத சிறை தண்டனையும், அவரின் சகோதரர் காஸ்டாஸுக்கு 15 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஜார்ஜ் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும், ஜாமீனில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X