சமந்தா… அமலாபால்… பாவாடை தாவணி யாருக்கு அழகு?

By Mayura Akilan

தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரிய உடை பாவடை தாவணியாக இருந்தது. இன்றைக்கு சுடிதார், சல்வார் என்று மாறிவிட்டது. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட பெரும்பாலான பெண்கள் சுடிதாருக்கு மாறிவிட்டனர். யாரும் பாவாடை, தாவணியை விரும்புவதில்லை.

கல்லூரிப் பெண்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை, திருவிழா நாட்களில் மட்டுமே பாவடை தாவணியை காணமுடிகிறது. அது சொல்லி வைத்து ஒரே மாதிரி பாவாடை தாவணியில் அணிந்த வந்து பட்டாம் பூச்சிகளாய் வலம் வருவார்கள்.

சினிமாவில் கிராமத்து கதைகளை எடுப்பவர்கள் இப்போது குறைந்து போய்விட்டனர். சில இயக்குநர்கள் மட்டுமே கிராமத்து சப்ஜெக்ட் பக்கம் வந்தாலும் கதாநாயகிகளுக்கு போட்டு விடுவது என்னவோ கவர்ச்சி உடைதான். இருந்தாலும் சில படங்களில் ஒரு சில காட்சிகளிளாவது கதாநாயகிகள் பாவாடை தாவணியில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த கட்டுரை. இன்றைய தமிழ்பட கதாநாயகிகள் யாருக்கு பாவாடை தாவணி எடுப்பாக இருக்கும்? மேற்கொண்டு படியுங்களேன்.

அசத்தலான சமந்தா

அசத்தலான சமந்தா

ஹோம்லி லுக்... க்யூட் சிரிப்பு என இன்றைய இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் சமந்தா. சிக்கென்ற சல்வார் சூப்பராக இருந்தாலும் கிராமத்து கதாபாத்திரத்தில் பாவடை தாவணியில் நன்றாக இருக்கும் என்கின்றனர்.

கலக்கல் ஸ்ருதி ஹாசன்

கலக்கல் ஸ்ருதி ஹாசன்

அறிமுகமான படத்தில் இருந்தே மாடர்ன் உடைகளில் வலம் வரும் ஸ்ருதிஹாசன் தெலுங்கு படங்களில் பாவடை தாவணியில் அசத்துகிறார். தமிழ்நாட்டு ரசிகர்களும் ஸ்ருதியை பாவடை தாவணியில் பார்க்க விரும்புகிறார்களாம்.

அன்னக்கொடி கார்த்திகா

அன்னக்கொடி கார்த்திகா

கோ படத்தில் அறிமுகமான கார்த்திகா, இப்போது அன்னக்கிளியும் கொடி வீரனும் படத்தில் பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறாராம் படம் வரட்டும் பார்க்கலாம்.

கடல் துளசி எப்படி?

கடல் துளசி எப்படி?

கார்த்திகாவின் தங்கை துளசி இப்போதுதான் கடல் படத்தை முடித்திருக்கிறார். ஜீவா உடன் ஒரு படத்தில் இப்போது ஜோடி சேர்ந்துள்ளார். மாடர்ன் உடையை விட துளசிக்கு பாவடை தாவணிதான் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.

அசத்தல் அமலா பால்

அசத்தல் அமலா பால்

மைனா படத்தில் சிவப்பு கலர் பாவாடை தாவணியில் வந்து எல்லோர் மனதையும் கொள்ளையடித்திருப்பார். வேட்டை படத்திலும் பட்டுப்பாவாடை தாவணியில் அசத்தியிருப்பார் அமலாபால். கிராமத்து வேடம் அமலாவிற்கு கச்சிதமாக பொருந்துகிறதாம்.

அசால்ட் அஞ்சலி

அசால்ட் அஞ்சலி

நகரத்து கதையோ, கிராமத்து கதையோ இரண்டுமே அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்கிறது. அதே போல உடைகளில் பாவாடை தாவணி அசத்தம் பொருத்தமாம் அஞ்சலிக்கு.

கிராமத்து இனியா

கிராமத்து இனியா

கிராமத்து கதாபாத்திரம் என்றால் கூப்பிடுங்கள் இனியாவை என்று கூறும் அளவிற்கு செட் ஆகிவிட்டார் இனியா. பாவடை தாவணியும் இவருக்கு பாந்தமாய் பொருந்துகிறதாம்.

‘பூ’பார்வதி மேனன்

‘பூ’பார்வதி மேனன்

அறிமுகமான ‘பூ' படத்திலேயே பாவடை தாவணியில் அசத்தலாக நடித்திருப்பார் பார்வதி மேனன். இப்போது தனுசுடன் மரியான் படத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

டாப்ஸிக்கு செட் ஆகுமா

டாப்ஸிக்கு செட் ஆகுமா

டாப்ஸிக்கு பாவடைதான் பிடிக்குமாம். அதுவும் வயலட் கலர் ரொம்ப பேவரைட் என்கிறார். இயக்குநர்கள் கொஞ்சம் பாவடை தாவணி போட்டு அழகு பாருங்களேன்.

பப்ளி ஹன்சிகா

பப்ளி ஹன்சிகா

இன்றைய தேதியில் ஏழு படங்களை கையில் வைத்திருக்கும் நடிகை ஹன்சிகாதான். ஒரு படத்திலாவது கிராமத்து கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது இவருக்கு ஆசையாம். புதிய இயக்குநர்கள் கவனிங்களேன்.

காஜல் அகர்வால் எப்படி?

காஜல் அகர்வால் எப்படி?

பழனி படத்தில் நடிக்கும் போது காஜல் அகர்வால் பாடல் காட்சியில் பாவடை தாவணி கட்டியதாக நினைவு இருக்கிறது. ஆனால் இப்போதைய உடல் அமைப்பிற்கு பாவடை தாவணி எப்படி இருக்கும் சொல்லுங்கள் ரசிகர்களே?

உயரமான வரலட்சுமி

உயரமான வரலட்சுமி

‘போடா போடி' படத்தில் நடித்த வரலட்சுமிக்கு கிராமத்து வேடம் அமையுமா என்று தெரியவில்லை. பாவடை தாவணி போட்டு நடிக்க ஆசைப்படும் வரலட்சுமியை கொஞ்சம் கவனிங்க இயக்குநர்களே!

ஐஸ்வர்யா அர்ஜூன்

ஐஸ்வர்யா அர்ஜூன்

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா இப்போதுதான் சினிமாவிற்கு புது முகம். மாடர்ன் மங்காத்தாவாக இருந்தாலும் அவருக்கு கிராமத்து வேடம் பொருந்துமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அசத்தும் த்ரிஷா

அசத்தும் த்ரிஷா

திரிஷா நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் அன்று பார்த்தது போலவேதான் இருக்கிறார். ஜீ படத்தில் பள்ளி மாணவியாக பாவாடை தாவணியில் நடித்த ஞாபகம். கில்லி, திருப்பாச்சி, போன்ற படங்களில் சூப்பராக செட் ஆகியிருக்கும்.

அசினுக்கு நல்லாயிருக்குமோ?

அசினுக்கு நல்லாயிருக்குமோ?

மும்பை பக்கம் போனாலும் தமிழ் படங்களில் நடித்த போது வேல், சிவகாசி உள்ளிட்ட படங்களில் பாவாடை தாவணி கட்டியிருப்பார் அசின்.

செம கட்டையாம் சமீரா ரெட்டி

செம கட்டையாம் சமீரா ரெட்டி

வேட்டை படத்தில் ஒரு சில சீன்களில் பாவடை தாவணியில் வந்து போயிருப்பார் சமீரா ரெட்டி. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தவர்கள் செம கட்டை என்றார்களாம். அதன் அர்த்தம் தெரியமலேயே ஊடகங்களிடம் சொன்னார் சமீரா.

அனுஷ்காவிற்கு சூப்பர்

அனுஷ்காவிற்கு சூப்பர்

உயரமான அனுஷ்காவிற்கு இப்போது பாவாடை தாவணி பருவமெல்லாம் தாண்டியாகிவிட்டது. ஆனாலும் அம்மணிக்கு அந்த உடை அசத்தல் என்கின்றனர் ரசிகர்கள்.

தேவதை நயன்தாரா

தேவதை நயன்தாரா

ஐயா படத்தில் தொடங்கி யாரடி நீ மோகினி வரை பல படங்களில் பாவாடை தாவணியில் சும்மா சூப்பராய் செட் ஆகியிருப்பார் நயன்தாரா. அப்புறம் கிளாமருக்கு மாறிய பின்னர் பாவடை தாவணியை திரும்பி கூட பார்ப்பதில்லை. மறுபடியும் ஒரு படத்தில் பாவாடை தாவணி போட்டு நடிங்களேன் என்று கோரிக்கை வைக்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X