ரவி மோகனை பிரிந்த கெனிஷா பின்னணி பாடகி மட்டுமா?.. ஒரு படத்தில் நடிச்சிருக்காங்க.. அது எது தெரியுமா?

சென்னை: கெனிஷா என்றால் சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. தனது மனைவியை பிரிவதாக அறிவித்த சில நாட்களிலேயே ரவி மோகனும், கெனிஷாவும் ஒரே நிறத்திலான ஆடையை அணிந்து வந்த பிறகுதான் ஒட்டுமொத்த பேருக்கும் கெனிஷாவை பற்றி தெரியவந்தது. தொடர்ந்து இரண்டு பேரும் நெருக்கமாகவே பழகிவந்தார்கள். விரைவில் திருமணமும் செய்துகொள்வார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் பிரேக் அப் ஆகிவிட்டது.

நடிகர் ரவி மோகன் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பில், 'நான் எனது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன்' என கூறியிருந்தார். அதனையடுத்து பல அறிக்கை போர்கள் எல்லாம் நடந்தன. இதற்கிடையே ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த கையோடு பின்னணி பாடகி கெனிஷாவுடன் ஒரே நிறத்திலான உடையை அணிந்துகொண்டு திருமணத்துக்கு வந்திருந்தார். இதன் மூலம் அவர், 'நாங்கள் இரண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம்' என்ற மெசேஜை சொல்கிறாரோ என கருதப்பட்டது.

Who Is Kenishaa Ravi Mohan s Rumoured Partner Once Acted in Aishwarya Rajesh s Kanaa
Photo Credit:

மறுத்தாலும் உண்மைதான்: அதனை அவர் முதலில் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கிடையே நட்பையும் தாண்டி வேறு ஒன்று இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது. அவர்களும் அதை கேஷுவலாக எடுத்துக்கொண்டார்கள். விரைவில் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என திரைத்துறையினர் கூறினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் கெனிஷா சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Also Read
ஜனநாயகன் எப்போது வெளியாகும்?.. ரிலீஸ் தேதி பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் விஷயம்.. பிரச்னை ஓவரா?
ஜனநாயகன் எப்போது வெளியாகும்?.. ரிலீஸ் தேதி பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் விஷயம்.. பிரச்னை ஓவரா?

கெனியின் வீடியோ: அந்த வீடியோவில், "திருமண வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், கரு கலைந்தது உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார். அதுமட்டுமின்றி ரவி மோகனின் குடும்பத்தை தான் பிரிக்கவில்லை என்றும்; அவரை முழு சுதந்திரத்துடன் வழியனுப்பி வைக்கிறேன். இனிமேல் நான் அவருக்காக போராடப்போவதில்லை. அவரை காப்பாற்றுவதற்காக என்னையே நான் தியாகம் செய்தேன் என்றெல்லாம் பேசியிருந்தார். மேலும் ரவியை நான் அனுப்பி வைப்பதாகவும்; சென்னையை விட்டே வெளியேறுகிறேன். இனிமேல் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

மீண்டும் பஞ்சாயத்து: அவரது அந்த வீடியோவுக்கு ஆர்த்தி ரவி பதிலடி கொடுக்க; ரவி மோகன் கொந்தளிப்பின் உச்சத்துக்கே சென்று செய்தியாளர் சந்திப்பில் பல விஷயங்களை கொட்டி தீர்த்தார். ஆகமொத்தம் ரவி மோகன் - கெனிஷா - ஆர்த்தி ரவி விவகாரம் மீண்டும் ஹெட்லைன்ஸாக மாற தொடங்கியிருக்கிறது. கெனிஷாவை பொறுத்தவரை அவர் சொன்னபடியே சென்னையை விட்டே வெளியேறிவிட்டார் என்றுதான் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கொஞ்ச நாட்கள் அனைத்திலிருந்து பிரேக் எடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

Who Is Kenishaa Ravi Mohan s Rumoured Partner Once Acted in Aishwarya Rajesh s Kanaa
Photo Credit:

நடித்த படம்: இப்போதுதான் அவர் தனியிசையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்தார். இந்த நேரத்தில் இப்படி ஒரு அடி அவருக்கு விழுந்திருக்கிறது. கூடிய விரைவில் அவர் மீண்டும் பாடல்கள் உலகத்துக்குள் வர வேண்டும் என்பது அவரது நலம் விரும்பிகளின் ஆசை. இத்தனை நாட்கள் அவர் பின்னணி பாடகி, தெரபிஸ்ட் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா திரைப்படத்தின் இறுதியில், கிரிக்கெட் போட்டியில் பரிசுகள் வழங்கும் நிகழ்வில் தொகுப்பாளினியாக நடித்திருந்தார். இப்போது அந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து, அட நம்ம கெனிஷாவா இவங்க அடையாளம் தெரியாமல் இருந்திருக்காங்களே என ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X