நடிகரை காதலிக்கிறேனா, சொல்லவே இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் துணை நடிகரை காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கெரியர் தற்போது சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் துணை நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகின.
ஐஸ்வர்யா ராஜேஷ்
காதல் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் காதல் கதை குறித்த வதந்திகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த நபர் யார் என்று தயவு செய்து எனக்கு கூறுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். போலி செய்தி பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். ஏதாவது நடந்தால் நானே முதல் ஆளாக அறிவிப்பேன். சிங்களாக தான் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

வதந்தி
ஐஸ்வர்யா ராஜேஷின் கெரியர் நன்றாக செல்வதை பார்த்து யாராவது பொறாமையில் இப்படி வதந்தியை கிளப்பிவிட்டிருப்பார்கள் என்று அவரின் நலம் விரும்பிகள் தெரிவித்தனர். கடைசியில் அப்படித் தான் நடந்துள்ளது.
மகிழ்ச்சி
ஐஸ்வர்யா ராஜேஷும் சிங்கிளாக இருப்பதை பார்த்து சிங்கிள்சுக்கு ஒரே ஆனந்தம்.

விளம்பரம்
நீங்கள் யாரையும் காதலிப்பதாக செய்தி எதுவும் வரவில்லையே என்று சிலரும், கண்டுகொள்ளாதீங்க ஐஸ், படங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











