எந்த நடிகைக்கு புடவை அழகு?

By Mayura Akilan

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவை ஆனால் சினிமா நடிகைகள் புடவை கட்டுவது அபூர்வமானது. திரைப்படங்களில் அத்திப்பூத்தார்போல நடிகைகள் புடவை கட்டினாலும் அதிலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய நடிகைகளுக்கு நாகரீக உடைகளை விட புடவைதான் பாந்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த நடிகைகளை புடவையில் பார்த்து ரசிக்க அதிகம் பிடிக்கும் என்று ரசிகர்கள் பட்டியலிட்டுள்ளன. சுவாரஸ்யமான ரசிகர்களின் ரசனைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆறடி அனுஷ்கா அழகு தேவதை

ஆறடி அனுஷ்கா அழகு தேவதை

யோகா செய்து உடம்பை கச்சிதமாக வைத்திருக்கும் அனுஷ்கா தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானர். அதில் புடவை கட்டிய தேவதையாக வந்த அனுஷ்காவை சூப்பர் என்று சொல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். அருந்ததி படத்தில் அவரின் நடிப்பும் புடவை கட்டும் அலாதியாக பேசப்பட்டது. அதேபோல் வானம் படத்தில் கூட புடவையில் கவர்ச்சிப்புயலாய் மாறியிருப்பார் அனுஷ்கா. ரசிகக் கண்மணிகள் அனுஷ்கா புடவையில் பார்ப்பதையே அதிகம் விரும்புவதாக கருத்துக் கூறியுள்ளனர்.

த்ரிஷாவின் ஸ்மார்ட்

த்ரிஷாவின் ஸ்மார்ட்

குறும்புப் பார்வையும், குமிழ்சிரிப்புமாய் வலம் வருபவர் த்ரிஷா. மாடர்ன் உடையிலேயே ரசிகர்களுக்கு தரிசனம் தந்த த்ரிஷா ‘உனக்கும், எனக்கும்' படத்தில் பாவடை தாவணியில் கலக்கியிருப்பார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் காட்டன் புடவையில் அசத்தியிருப்பார். அதுவரை த்ரிஷாவை பிடிக்காமல் இருந்தவர்கள் கூட த்ரிஷாவின் ரசிகர்களாக மாறிவிட்டனர்களாம்.

ஒல்லிக்குச்சி ஸ்ரேயா

ஒல்லிக்குச்சி ஸ்ரேயா

ஸ்ரேயாவின் உடல்வாகிற்கு புடவை அத்தனை பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் ஏனோ ஐஸ்கிரீம் உடல் அமைப்பு கொண்ட ஸ்ரேயாவை இயக்குநர் பலரும் கவர்ச்சி நாயகியாகவே நடிக்க வைக்கின்றனர் என்பது ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நளினமான நயன்தாரா

நளினமான நயன்தாரா

ஐயா படத்திலேயே நயன்தாரா புடவை கட்டி அசத்தலாய் நடித்திருப்பார். அப்புறம் சந்திரமுகியில் புடவைதான் நயன்தாராவின் காஸ்டியூம். நாளடைவில் நயன்தாராவின் உடை குறைந்து போனது. ஆனால் நயன்தாராவிற்கு பிடித்த உடை புடவைதானாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதற்காகவே போத்தீஸ் புடவை விளம்பரத்தில் ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்திருந்தார்.

துள்ளல் ஹன்சிகா

துள்ளல் ஹன்சிகா

பப்ளி ஹன்சிகாவிற்கு ‘எங்கேயும் காதல்' படத்திலேயே புடவை கட்டி அழகு பார்த்திருப்பார் இயக்குநர் பிரபுதேவா. அடுத்தடுத்து நடித்த படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது புடவையில் நடித்துவிடுவார் ஹன்சிகா. ஆனால் ரசிகக் கண்மணிகள் புடவையை விட மாடர்ன் டிரஸ்தான் ஹன்சிகாவிற்கு அழகு என்று கூறியிருக்கின்றனர்.

இடுப்பழகி தமன்னா

இடுப்பழகி தமன்னா

மாடர்ன் உடையிலேயே பார்த்து பழக்கப்பட்ட தமன்னாவை சிறுத்தை படத்தில் புடவையில் பார்த்த உடன் ரசிகர்கள் விசிலை பறக்கவிட்டிருப்பார்கள். பிரபலமடைவதற்கு முன்பு நடித்த ஒரு சில படங்களில் புடவை கட்டி நடித்திருந்தாலும் தமன்னா சிறுத்தை படத்தில் புடவை கட்டி நடித்ததுதான் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்திருந்ததாம்.

கண்ணழகி காஜல் அகர்வால்

கண்ணழகி காஜல் அகர்வால்

பழனி படத்தில் அறிமுகமான காஜல் அகர்வால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கே அவர் நடித்த மகதீரா படம் வெற்றி பெறவே தமிழ் இயக்குநர்களின் பார்வை காஜல் அகர்வால் பக்கம் திரும்பியது. தமிழில் ‘நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தியுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும் அண்ணன் சூர்யாவுடன் நடித்த மாற்றன்தான் ரசிகர்களின் மனதில் நிற்கிறதாம். அதில் காஜல் அகர்வால் புடவை கட்டி நடித்தது அழகாய் இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.

கொள்ளை அழகு சமீரா ரெட்டி

கொள்ளை அழகு சமீரா ரெட்டி

சமீரா ரெட்டியின் உயரத்திற்கு புடவை அத்தனை பொருத்தமாய் இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். வாரணம் ஆயிரம் படத்தில் பச்சை நிற புடவையில் தேவதையைப் போல இருந்தாராம் சமீரா. அதேபோல் வேட்டை படத்திலும் புடவையில் நடித்திருப்பார். மாடர்ன் உடையை விட சமீராவை புடவையில் பார்ப்பதுதான் கொள்ளை அழகு என்கின்றனர் ரசிகர்கள்.

அசத்தலான அமலாபால்

அசத்தலான அமலாபால்

சிந்து சமவெளி படத்திலேயே புடவையில் அசத்தியிருப்பார் அமலாபால். ஆனால் மைனா படத்தில் சிவப்பு பாவாடை தாவணிதான் அமலாபாலின் காஸ்டியூம். அடுத்து நடித்த தெய்வத்திருமகள் படத்தில் காட்டன் புடவையில் கலக்கியிருப்பார் அமலாபால். அமலாபாலுக்கு மாடர்ன் உடையை விட புடவைதான் பெஸ்ட் என்கின்றனர் ரசிகர்கள்.

தென்றல் தேவதை

தென்றல் தேவதை

புன்னகைக்கு மட்டுமல்ல, சேலையில் சொக்க வைப்பதிலும் சினேகாதான் ராணி. ,தான் நடித்து அறிமுகமான விரும்புகிறேன் படம் முதல் நிறையப் படங்களில் புடவையில்தான் நடித்துள்ளார். மாடர்ன் டிரஸ்ஸுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். மாறாக, புடவைக்கும் இவருக்கும் செம பொருத்தம். இயக்குநர்களும் சினேகாவை புடவையில் நடிக்க வைக்கவே விரும்புகின்றனர். ரசிகர்களுக்கும் புடவை சினேகாதான் ரொம்பப் பிடிக்கும்.

எனவே இயக்குநர்களே ரசிகர்களின் கருத்துக்களை ஏற்று இனி இந்த தேவதைகளை புடவையிலே நடிக்கவைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏதோ நம்மால முடிஞ்சதுங்க !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X