திரிஷாவின் பாய் பெஸ்ட்டி யார் தெரியுமா?.. இரண்டு பேருக்கும் செம நெருக்கம்.. பார்ட்டியெல்லாம் சும்மா தெறிக்கும்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷாவை சுற்றி கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. திரைத்துறையிலிருந்து வரும் கருத்துக்களுக்கு இவரும் தனது பதிலடியை கொடுத்துவருகிறார். அதேசமயம் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் பேசுவதற்கு ஆழமான மௌனத்தையே பதிலாக கொடுக்கிறார். இந்நிலையில் அவரது பாய் பெஸ்ட்டி குறித்த தகவல்களும், புகைப்படங்களும் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருக்கின்றன.
மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷாவை இயக்குநர் பிரியதர்ஷன் தனது லேசா லேசா படத்துக்காக கமிட் செய்தார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாக தாமதமானது. இதற்கிடையே மௌனம் பேசியதே படத்தில் நடித்து முடித்துவிட்டார். எனவே ரிலீஸில் பார்த்தால் மௌனம் பேசியதே படம்தான் அவருக்கு முதல் படம் ஆகும். அதற்கு பிறகு தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை கோலிவுட்டில் உயர்த்திக்கொண்டார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கோலிவுட்டில் எப்படியோ டோலிவுட்டிலும் அப்படியே.

சிங்கிள் திரிஷா: நடிகை திரிஷா முதலில் வருண் மணியன் என்பவருடன் முதலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். ஆனால் சில காரணங்களால் அது திருமணம் வரை செல்லவில்லை. அதற்கு பிறகு சில காதல்கள் செய்ததாகவும்; அவை சில காரணங்களால் கைகூடாமல் போய்விட்டதாகவும் ஒரு தகவல் ஓடியதுண்டு. அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவரை பொறுத்தவரையில் சுதந்திரமாக; நினைத்ததை செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கக்கூடியவர் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள்.
நட்புகள் அதிகம்: திரிஷாவுக்கு திரைத்துறையில் நட்புகள் அதிகம். தனது தோழர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து பார்ட்டி, ட்ரிப் என பயங்கர ஆக்டிவ்வாக இருப்பார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து; லைக்ஸை அள்ளுவது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும்; வீக் எண்ட் ஆகிவிட்டால் அவரை கைகளிலேயே பிடிக்க முடியாது; கண்டிப்பாக நண்பர்களையும், நண்பீஸ்களையும் சந்தித்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.
பாய் பெஸ்ட்டி: திரிஷாவுக்கு எத்தனையோ தோழர்கள் இருந்தாலும்; அவருக்கு பாய் பெஸ்ட்டி என்றால் சிட்னி சிலேடன் என்பவர்தான். இவர் கென்யாவில் பிறந்தவர். ஆனால் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு; ஃபேஷன் டிசைனிங்கை இத்தாலிக்கு சென்று படித்தார். அதனையடுத்து தமிழ் திரைத்துறையில் 5 ஸ்டார் படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனிங் செய்திருக்கிறார்.
திரிஷாவுக்கும் அவர்தான்: திரைப்படங்களுக்கு மட்டுமின்றி நடிகர்கள், நடிகைகளுக்கு பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனராகவும் இருக்கிறார். நடிகை திரிஷாவுக்கும் இவர்தான் ஆடை வடிவமைப்பாளர். தனது தோழிக்கு என்றால் எப்போதும் ஸ்பெஷல் டச் அந்த ஆடையில் இருக்கும்படி சிட்னி பார்த்துக்கொள்வார். திரிஷா அழகான தோற்றத்துக்கு மட்டுமின்றி; அழகான மனதுக்கும் சொந்தக்காரர் என்று புகழ்வார். திரிஷாவும் சில பேட்டிகளிலும், மேடைகளிலும் தவறாமல் சிட்னியை புகழ்ந்து பேசியிருப்பார். அதேபோல் எந்த பார்ட்டி நடந்தாலும் அதில் சிட்னி தவறாமல் இடம்பெற வேண்டும் என்று விரும்புவாராம் திரிஷா. இரண்டு பேரும் பார்ட்டி செய்தபடி; நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமயங்களில் சோஷியல் மீடியாவில் செம சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. இப்போதும் இரண்டு பேரும் நல்ல டச்சில்தான் இருக்கிறார்கள் என்று நெருக்கமான வட்டாரத்தினர் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











