திரிஷாவின் அம்மாவை பற்றி தெரியும்.. அவங்க அப்பாவை பற்றி தெரியுமா?.. எப்படி இறந்தார் தெரியுமா?

சென்னை: நடிகை திரிஷாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரிடம் இருக்கும் திறமையும், அழகும்தான் அவரது வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றாலும்; அவரது தாய் உமாவும் ஒரு காரணம். மகளை பார்த்து பார்த்து வளர்த்து மிஸ் சென்னையாக்கி பிறகு சினிமாவுக்குள் கொண்டு வந்தார். பலரும் திரிஷாவின் அம்மா உமாவை பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் அவரது தந்தை கிருஷ்ணன் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரை பார்த்திருக்கவும் மாட்டார்கள்.

திரிஷா இப்போதும் தமிழில் லீடிங் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவரது கொடி கோடம்பாக்கத்தில் உயர பறந்துகொண்டிருக்கிறது. இப்போது கயாடு லோஹர், மமிதா பைஜு, ஸ்ரீலீலா என இளம் படை தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும்; திரிஷாவின் இடத்தை அசைத்து பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. கடந்த வருடத்தில் மட்டும் மொத்தம் மூன்று பெரிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் கருப்பும், சிரஞ்சீவியோடு நடித்திருக்கும் விஸ்வம்பரா படமும் ரிலீஸாகவிருக்கின்றன.

Who is Trisha s Father Untold Story of Krishnan Who Stayed Away from Limelight
Photo Credit:

திரிஷாவின் குடும்பம்: திரிஷா இப்போதைக்கு இருக்கும் உயரத்துக்கு கண்டிப்பாக அவரது திறமை, உழைப்பு, அழகு காரணம். அதேபோல் அவரது தாய் உமாவின் உழைப்பையும், நம்பிக்கையையும் எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. நடிகை மீனாவுக்கு எப்படி அவரது தாய் பக்கபலமாக இருந்தாரோ; அதேபோல்தான் திரிஷாவுக்கு உமா பக்கபலமாக இருக்கிறார். தன்னுடைய வெற்றிக்கு முழு காரணம் தன்னுடைய தாய் உமாதான் என்று பல மேடைகளில் திரிஷாவும் பெருமையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

திரிஷாவின் தந்தை: திரிஷாவுடைய தாய் உமாவை எல்லோருக்கும் தெரியும். அவரும் பல நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங்கிற்கும் திரிஷாவுடன் வருகை தந்திருக்கிறார். அதேசமயம் அவரது தந்தை கிருஷ்ணனை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய மகள் பெரிய ஹீரோயினாக இருந்தாலும் கிருஷ்ணனோ கேமராவுக்கு தூரமாகவே இருந்திருக்கிறார். இதற்கிடையே உமாவுக்கும், கிருஷ்ணனுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும்; அதனால்தான் மனைவி, மகளுடன் அவர் தங்கவே இல்லை என்றும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

Also Read
LIK படத்தில் நடிச்சிருக்காரு.. அதை விட்டுட்டு TN 2026க்கு விமர்சனம் செய்த சீமான்.. விஜய் தான் விஷயமா?
LIK படத்தில் நடிச்சிருக்காரு.. அதை விட்டுட்டு TN 2026க்கு விமர்சனம் செய்த சீமான்.. விஜய் தான் விஷயமா?

கிருஷ்ணன் பார்த்த தொழில்: மகள் கோடி கோடியாக சம்பாதித்தாலும் கிருஷ்ணன் இறுதிவரை தன்னுடைய சொந்த காலிலேயே நின்றவர். அவர் சென்னையில் பல நட்சத்திர ஹோட்டல்களில் மேனேஜராக பணியாற்றியவர். தனது பணியில் ரொம்பவே நேர்மையாக இருந்தவராம். அதுமட்டுமின்றி ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவ்வளவு பக்குவமாக பேசுவார் என்றும் அவருடன் பழகிய, நேரில் பார்த்தவர்கள் சொல்வதுண்டு. முக்கியமாக, தான் ஒரு பெரிய நடிகையின் தந்தை என்பதை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பவராம்.

எப்படி இறந்தார்?: இறுதிவரை அவரை சினிமா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்கூட பார்க்க முடியவில்லை. சென்னையில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த அவர் திடீரென ஹைதராபாத்துக்கு சென்று ஹோட்டலில் பணிபுரிய ஆரம்பித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட உயிரிழந்துவிட்டார். தந்தை இறந்தது திரிஷாவை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம். இப்போதும் தன்னுடைய தந்தை நினைவில்தான் திரிஷா இருக்கிறாராம். முன்னதாக, சமீப காலங்களில் திரிஷாவின் பெயர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறது. முக்கியமாக விஜய்யுடன் ஒரு திருமணத்துக்கு மேட்சிங்காக உடைகள் அணிந்துகொண்டு வந்திருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: trisha திரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X