நிஜ வாழ்க்கையில் த்ரிஷாவின் 'ராம்' யார்?

By Siva

சென்னை: தன்னுடைய ராம் யார் என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தை பார்ப்பவர்களால் தங்களின் பள்ளிக் காலத்து காதலை அசை போடாமல் இருக்க முடியவில்லை.

படத்தில் ரசிகர்கள் தங்களை பார்ப்பதால் தான் அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

['இந்தப் பூனை பீரே குடிக்கும்'.. போதையில் ரகளை செய்து படக்குழுவை மிரள வைத்த நடிகை!]

ராம்

ராம்

96 படத்தை பார்த்தபோது காதலிக்காதவர்கள் கூட நமக்கு ராம் போன்று ஒரு கணவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கியுள்ளனர். இந்நிலையில் த்ரிஷாவின் நிஜ வாழ்க்கையில் அந்த ராம் யார் என்று தெரிய வந்துள்ளது. படத்தை பார்த்த ஆண்கள் தங்களின் ஜானுவையும், பெண்கள் தங்களின் ராமையும் நினைத்து பெருமூச்சுவிட்டனர்.

காதல்

காதல்

த்ரிஷா பெண்கள் பள்ளியில் படித்துள்ளார். அதனால் அவரின் வாழ்வில் எந்த ராமும் வரவில்லையாம். படத்தில் மட்டுமே ராம் உண்டு நிஜத்தில் இல்லை என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். த்ரிஷா சினிமா மீது காதல் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெசியை விட ஜானு கதாபாத்திரம் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.

முகபாவனை

முகபாவனை

முகபாவனையை வைத்தே படத்தை வெற்றிகரமாக ஓட்டும் திறமை கொண்டவர் நயன்தாரா. தற்போது தன்னாலும் அது முடியும் என்பதை ஜானு கதாபாத்திரம் மூலம் த்ரிஷா நிரூபித்துள்ளார். த்ரிஷாவின் நடிப்பு பசிக்கு தீனி போடும் படங்கள் தொடர்ந்து கிடைத்தால் அவர் மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

96 படத்தை பார்த்த பிறகு ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் த்ரிஷாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த படத்தில் பிளாஷ்பேக்கில் மட்டுமே த்ரிஷா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீஸானால் தான் உண்மை தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X