யாரப்பா அது, சன்னி லியோன் பேண்டீஸை களவாண்டது...?
மும்பை: நடிகை சன்னி லியோனின் விலை உயர்ந்த உள்ளாடைகளை யாரோ திருடிவிட்டார்களாம்.
சன்னி லியோன் ராகினி எம்.எம்.எஸ்.-2 என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 17ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தேதி மார்ச் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடந்த திருட்டு சம்பவம் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

உள்ளாடை
சன்னி லியோன் ராகினி படத்தில் நடிக்கையில் விலை உயர்ந்த சாம்பல் கலர் உள்ளாடை அணிந்து ஒரு காட்சியில் நடித்தாராம். அந்த காட்சி முடிந்ததும் அவர் உடை மாற்றிய பிறகு உள்ளாடையை யாரோ திருடிவிட்டார்களாம்.

மீண்டும் ஆர்டர்
மீண்டும் அதே உள்ளாடையை அணிந்து நடிக்க வேண்டி இருந்ததால் ஆன்லைனில் ரூ.50,000க்கு புதிய உள்ளாடையை ஆர்டர் செய்து வரவழைத்தார்களாம். இதனால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாம்.

டிசைனர்
சன்னி தான் அணியும் உள்ளாடைகளில் மிகவும் கவனமாக இருப்பாராம். அதிலும் குறிப்பாக அவர் டிசைனர் உள்ளாடைகள் தான் அணிவாராம். இந்நிலையில் உள்ளாடை திருடு போனதை அடுத்து படப்பிடிப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாம்.

ரூ. 1 கோடி
ராகின் எம்.எம்.எஸ். 2 படத்தில் நடிக்க சன்னிக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தார்களாம். வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்த சன்னி ஜிஸ்ம் 2 படம் மூலம் பாலிவுட் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா ஜேன்
விலை உயர்ந்த உள்ளாடை திருடுபோனது பாலிவுட்டில் இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக க்யா சூப்பர் கூல் ஹைன் ஹம் படத்தில் நடித்த போது சாரா ஜேன் டயஸின் விலை உயர்ந்த டிசைனர் உள்ளாடை திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











