ஹீரோக்களுடன் நெருங்கிப் பழகுவது நடிப்புக்காக தான்: லக்ஷ்மி மேனன்
சென்னை: தான் ஹீரோக்களுடன் நெருங்கிப் பழகுவதற்கான காரணத்தை நடிகை லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் லக்ஷ்மி மேனன் தான் கோலிவுட் தயாரிப்பாளர்கள் கொண்டாடும் ஹீரோயின் ஆவார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் லக்ஷ்மி மேனன் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.
அதனால் தான் பல ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர ஆசைப்படுகிறார்கள்.

லக்ஷ்மி மேனன்
லக்ஷ்மி மேனன் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோக்களுடன் நெருக்கமாக இருப்பதாக கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

நெருக்கம்
சக நடிகர்களுடன் நட்பாக நெருங்கிப் பழகினால் தான் அவர்களுடன் நடிக்கும்போது எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் லக்ஷ்மி மேனன்.

சிப்பாய்
லக்ஷ்மி மேனன் சிப்பாய் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாகவும், கொம்பனில் கார்த்தி ஜோடியாகவும் நடிக்கிறார்.

கௌதம்
கௌதம் கார்த்திக் நடித்த கடல் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் அவருக்கு சிப்பாய் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











