தமிழ் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த சென்னையில் வீடு வாங்கிய எமி ஜாக்ஸன்!
எமி ஜாக்ஸனுக்கு ரஜினியுடன் நடிக்கும் 2.ஓ படம் மட்டும் தான் தமிழில் இருக்கிறது. ஆனால் சென்னையில் தனி வீடு வாங்கிக்குடியேறி விட்டார். அதற்கான காரணம்தான் நம்மை புல்லரிக்க வைக்கிறது.
இதுநாள் வரை எமி ஜாக்ஸன் சென்னை வந்தால் நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவார். அந்த செலவும் தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழுந்தது. இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் எமியை கமிட் பண்ண யோசித்தார்கள். எனவேதான் தயாரிப்பாளர்கள் யாரும் இனி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே எமி சென்னையில் புது வீடு வாங்கி விட்டாராம்.

இதனால் தமிழ் தயாரிப்பாளர்கள் தன்னை கமிட் பண்ண இனி யோசிக்க மாட்டார்கள் என நம்புகிறார் எமி. நல்ல விஷயம்தான்... அப்படியே சம்பளத்திலும் கொஞ்சம் சலுகை காட்டினால் தயாரிப்பாளர்கள் நிஜமாவே குஷியாகிடுவாங்க!
Comments


Click it and Unblock the Notifications