தனிக்குடித்தனம் போயும் பயனில்லை.. ஹன்சிகா மோத்வானி விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

மும்பை: தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, ரவி மோகன் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர்; சிம்புவை காதலிக்கவும் செய்தார். ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் பாதியில் முடிந்தது. அதனையடுத்து சொஹைல் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அந்தத் திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்துவிட்டது. இந்நிலையி அவர்கள் விவாகரத்து பெற்றதற்கான காரணங்கள் வெளியே வந்திருக்கின்றன.

தமிழ் சினிமா செலிபிரிட்டிகள் வரிசையாக விவாகரத்து பெற்றுவருகிறார்கள். தனுஷ் - ஐஸ்வர்யாவில் ஆரம்பித்த இந்த விஷயம் கடந்த மாதம் விஜய் - சங்கீதாவில் வந்து நின்றது. இப்படிப்பட்ட சூழலில் லேட்டஸ்ட்டாக அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. ஹிந்தி திரையுலகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி; பிறகு ஹீரோயினாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Why Did Hansika Motwani Divorce Sohail Kathuria After 2 Years Joint Family Issues Revealed
Photo Credit:

தமிழில் செம பிஸி: ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் பிஸியாக நடித்துவந்த அவர்; தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் ஹன்சிகாவின் மார்க்கெட் வளர்ந்தது. அப்படத்துக்கு பிறகு வேலாயுதம், மான் கராத்தே, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். செம பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் அவருக்கு வெற்றியும், தோல்வியும் சரி சமமாகவே கிடைத்தன. குறிப்பாக அவரது உடல்வாகு தமிழ்நாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.

சிம்புவுடன் காதல்: சிம்புவுக்கு ஜோடியாக வாலு படத்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. தாங்கள் அஜித் - ஷாலினி போல் இருப்போம் என்று பொதுவெளியிலும் சொன்னார்கள். சில வருடங்கள் மிக தீவிரமாக காதலித்த அவர்களுக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்கும் எண்ணமும் இருந்தது. ஆனால் திடீரென அவர்கள் தங்களது காதலை பிரேக் அப் செய்துகொண்டார்கள். அந்தப் பிரிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும்; சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் சைலெண்ட்டாக அதை கடந்துவிட்டார்கள்.

Also Read
Hansika Motwani Divorce: ஹன்சிகா மோத்வானி விவாகரத்து.. ஜீவனாம்சம் விவரம் தெரியுமா?
Hansika Motwani Divorce: ஹன்சிகா மோத்வானி விவாகரத்து.. ஜீவனாம்சம் விவரம் தெரியுமா?

ஹன்சிகா திருமணம்: சிம்புவுடனான பிரேக் அப்புக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த ஹன்சிகா; சொஹைல் கத்தூரியா என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதுவும் காதல் திருமணம்தான். நீண்ட நாட்கள் ஜோடியாக வாழ்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த சூழலில்; மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் இரண்டு பேரும் விவாகரத்து பெற்றிருக்கிறார்கல். மியூச்சுவலாக அவர்கள் பிரிந்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் விவாகர்த்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு குடும்பம் டூ தனிக்குடுத்தனம்: அதாவது முதலில் ஹன்சிகாவும், சொஹைலும் கூட்டு குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் கூட்டு குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன பிரச்னைகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. சரி செய்துகொள்ளலாம் என தைரியமாகவும் இருந்திருக்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து பிரச்னைகள் பெரிதானதால்; ஹன்சிகாவும், சொஹைலும் தனிக்குடுத்தனம் சென்றிருக்கிறார்கள். அங்கே சென்ற பிறகு சில வருடங்களாகவே அவர்களுக்குள் மேற்கொண்டு சண்டை, சச்சரவுகள் வர; இனிமேலும் ஒன்றாக வாழ்ந்தால் அடித்துக்கொண்டு நாற வேண்டியதுதான் என முடிவெடுத்து டைவர்ஸுக்கு சென்றிருப்பதாக தெரிகிறது. தனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் எனவும் ஹன்சிகா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X