சந்தோஷமே இல்லை, விஜய்யை பிரிந்ததும் நல்லதுக்கே: அமலா பால்

By Siva

கொச்சி: திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காததால் விஜய்யை பிரிந்ததாக நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அமலா கூறுகையில்,

திருமணம்

திருமணம்

திருமண வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. அதனால் கணவரை பிரிந்தேன். விஜய்யை பிரிந்தது நன்மைக்கே என்று நினைக்கிறேன்.

விவாகரத்து

விவாகரத்து

சந்தோஷம் இல்லாத திருமண பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதில் பலனில்லை. சந்தோஷம் இல்லையா அந்த பந்தத்தில் இருந்து வெளியேற யோசிக்கக் கூடாது. எனக்கு விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும்.

வேதனை

வேதனை

என் சிறு வயதில் எடுத்த முடிவு திருமணம். விவாகரத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும் அதில் இருந்து என் குடும்பத்தார் என்னை மீட்டுவிட்டனர். அவர்களின் ஆதரவு எனக்கு பலமாக உள்ளது.

சினிமா

சினிமா

விவாகரத்தால் எனக்கு பட வாய்ப்புகள் வராமல் இல்லை. நான் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்கிறேன்.

ஹீரோ

ஹீரோ

படத்தின் ஹீரோ யார் என்று என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கேட்பது இல்லை. கதை என்ன, என் கதாபாத்திரம் என்ன என்று தான் கேட்கிறேன். நான் மாடர்ன் உடை அணிவது பற்றி விமர்சிப்பவர்களை நான் கண்டுகொள்வது இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X