லிங்கா படப்பிடிப்பின்போது 'அந்த' ட்வீட்டை சோனாக்ஷி ஏன் அழித்துவிட்டார்?
சென்னை: லிங்கா படப்பிடிப்பின்போது தன்னை தங்க வைத்த ஹோட்டல் மகா மட்டமானது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. பின்னர் என்ன நினைத்தாரோ அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
ஜோக் நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சோனாக்ஷி சின்ஹா
ஷிமோகாவில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கடவுளே, நான் என்ன தவறு செய்தேன், இருப்பதிலேயே மோசமான ஹோட்டலில் என்னை தங்க வைத்துள்ளாயே? என்று தெரிவித்திருந்தார்.

தயாரிப்பு
இது குறித்து லிங்கா தயாரிப்பு தரப்பினரிடம் கேட்டதற்கு அவர்கள், இந்த பகுதியில் இருப்பதிலேயே சிறந்த ஹோட்டலில் தான் நடிகர், நடிகைகளை தங்க வைத்துள்ளோம். சோனாக்ஷி ட்விட்டரில் அப்படி தெரிவித்துள்ளது பற்றி எங்களுக்கு தெரியாது என்றனர்.

அழித்துவிட்டார்
ஹோட்டல் பற்றி சோனாக்ஷி போட்ட ட்வீட் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.

நண்பர்கள்
ரஜினியும், சோனாக்ஷியின் தந்தையும், நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் நண்பர்கள். ஒரு வேளை அப்பாவின் நண்பர் படத்திற்கு கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்று அந்த ட்வீட்டை அவர் அழித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஜினி
40 ஆண்டுகளாக மக்களை பாஸ் போன்று மகிழ்விக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்று சோனாக்ஷி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நீர்வீழ்ச்சி
ஷிமோகா மாவட்டத்தில் படப்பிடிபப்பில் இருக்கையில் எடுத்த நீர்வீழ்ச்சியின் படத்தை சோனாக்ஷி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு
சோனாக்ஷிக்கு படப்பிடிப்பு நடக்கும் இடம் எல்லாம் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் ஹோட்டல் தான் பிடிக்காமல் போய்விட்டது.


Click it and Unblock the Notifications











