டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனை ஏன் அப்படி பண்ணுனீங்க? பிரபல நடிகையிடம் விசாரிக்கும் ரசிகர்கள்!
சென்னை: இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை ஏன் அப்படி செய்தீர்கள் என்று பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
தெலங்கானாவை சேர்ந்தவர் ரிது வர்மா. தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில், பாட்ஷா, நா ராமாகுருடு, எவடே சுப்ரமணியம், பெல்லி சூப்புலு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கண்ணும் கண்ணும்
தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து துல்கர் சல்மான், ரக்ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதை தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில், ஒரு ரூபாய்க்கு கூட போராடும் நேர்மையான பெண்ணாக ஆரம்பத்தில் காட்டப்படும் ரிது வர்மா, இடைவேளையின் போது, பக்கா ஃபிராடாக நடித்திருப்பார்.

செல்லப் பிள்ளை
தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியானது. இரண்டு மொழிகளிலும் ஹிட்டானதால் ரிது வர்மா கவனிக்கப்பட்டார். தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகிவிட்ட ரிது, அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

ரசிகர்கள்
தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போல அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போடாத இவர், எப்போதாவது போட்டோக்களை பதிவிடுவார். இந்நிலையில், அவர் இப்போது பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர். சிலர் கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

கொள்ளைக்காரி
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை சம்மந்தப்படுத்தியே பலர் கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். ஒருவர், ஆஹா.. நீங்க பெரும் கொள்ளைக்காரியாச்சே என்று தெரிவித்துள் ளார். மற்றொருவர், கவுதம் வாசுதேவ் மேனனை ஏன் அப்படி பண்ணுனீங்க? அவரைப் பார்த்தா பாவமா தெரியலையா? என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











