ரசிகர்களை நான் ஏன் மச்சான் என்று அழைக்கிறேன் தெரியுமா?: நமீதா விளக்கம்
சென்னை: ரசிகர்களை தான் மச்சான் என்று அழைப்பதன் காரணத்தை நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா. குஜராத் அழகியான நமீதா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். நமீதா என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆறடி உயரம், சற்று குண்டான உருவம், மச்சான்ஸ்.
நமீதா தனது ரசிகர்களை பாசத்துடன் மச்சான் என்று தான் அழைப்பார். இப்படி அழைப்பதால் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். நமீதா ஏன் தனது ரசிகர்களை மச்சான் என்று அழைக்கிறார் தெரியுமா? இது குறித்து நமீதா அளித்த பேட்டி வருமாறு,

சென்னை தான் பிடிக்கும்
எனக்கு சென்னை தான் பிடிக்கும். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். சொந்த வீடும் உள்ளது. ஊழியர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். சென்னையைவிட்டு எங்கம் செல்லமாட்டேன். ரசிகர்களால் தான் சென்னையில் இருக்கிறேன் என்று நமீதா தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு
திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்வேன் என்றார் நமீதா.

மச்சானில் அன்பு உள்ளது
சினிமாவுக்கு வந்த புதிதில் ஷூட்டிங்ஸ்பாட்டில் லைட்பாய் முதல் அனைவரும் ஒருவரையொருவர் மச்சான் என்று அழைப்பார்கள். அதில் அன்பு இருந்ததால் அந்த வார்த்தை என்னை வெகுவாக கவர்ந்தது. அதனால் தான் நான் ரசிகர்களை மச்சான் என்று அழைக்கிறேன் என்று நமீதா கூறினார்.

இந்தியாவின் அழகான பெண்
இந்தியாவின் அழகான பெண் என்று ஜப்பானியர்கள் எனக்கு மரியாதை செய்தனர். இதற்கு என் ரசிகர்கள் தான் காரணம். அவர்கள் எனக்காக கோவில் கட்டினர் என்றார் நமீதா.


Click it and Unblock the Notifications











