»   »  'நான் ஏன் ஒருத்தரை மட்டும் காதலிக்கணும்?' - மனம் மாறிய ஓவியா!

'நான் ஏன் ஒருத்தரை மட்டும் காதலிக்கணும்?' - மனம் மாறிய ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நான் ஏன் ஆராவை காதலிக்கணும்?'-மனம் மாறிய ஓவியா!-வீடியோ

சென்னை : இன்று சென்னை ஓ.எம்.ஆர் ரோட்டில் நடைபெற்ற ஒரு தனியார் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகை ஓவியா.

விழாவில் கலந்துகொண்ட ஓவியாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓவியா ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த விழாவில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் தான் பாடிய 'கொக்கு நெட்டக் கொக்கு...' பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

ரசிகர்கள் போதும் :

ரசிகர்கள் போதும் :

எனக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு அன்பு செலுத்தும் ரசிகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார் ஓவியா. பிக்பாஸ் வீட்டில் ஆரவ் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட்டதாக மறைமுகமாகத் தெரிவிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஓவியா ரசிகர் படை :

ஓவியா ரசிகர் படை :

பிக்பாஸ் வீட்டில் துணிச்சலான பேச்சும் தனித்துத் தெரியும் குணமும் ஓவியாவுக்கு ரசிகர் படையை உருவாக்கின. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்படுவதற்கு முன்பு ஓவியா ஆர்மி, சேவ் ஓவியா ஹேஸ்டேக்குகள் பிரபலமாயின.

பிக்பாஸில் பங்கேற்பு? :

பிக்பாஸில் பங்கேற்பு? :

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாகவும் அப்போது ரசிகர்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார் ஓவியா. இதனால் ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மக்கள் ஆதரவு :

மக்கள் ஆதரவு :

ரசிகர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றிருக்கும் ஓவியா விளம்பரங்களில் நடிப்பதற்கும், புதிய படங்களில் நடிப்பதற்கும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Oviya participated in the shopping mall opening ceremony. Oviya participated in the function and was given special reception by fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil