நயன்தாரா, த்ரிஷாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி இருக்காங்க?
சென்னை: விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் இந்த கேள்வியை தான் கேட்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளன.
இந்த படங்களின் ஹீரோயின்களை பற்றி தான் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

த்ரிஷா
ரஜினியை விட வயதில் மிகவும் சிறியவர் த்ரிஷா. ஆனால் பேட்ட படத்தின் புகைப்படங்களில் பார்த்தால் ரஜினி இளமையாகவும், த்ரிஷா வயதானவர் போன்றும் தெரிகிறார். பிற படங்களில் நார்மலாக இருக்கும் த்ரஷா இதில் முதியவர் போன்று இருக்கிறார்.

சிம்ரன்
பேட்ட படத்தின் புகைப்படங்களில் சிம்ரனும் வயதானவர் போன்று தெரிகிறார். ஆனால் அவரை விட த்ரிஷாவை பார்க்கும்போது ஏன் இப்படி மேக்கப் போட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. த்ரிஷா மேக்கப் இல்லாமல் இருந்தால் கூட இப்படி வயதானவர் போன்று இருக்க மாட்டாரே. ஏன் பாஸ்?

வயது
அஜித்தை விட நயன்தாரா சின்னவர் தான். விஸ்வாசம் பட புகைப்படங்களில் நயன்தாராவை பார்த்தாலே பகீர் என்று உள்ளது. ரொம்பவே வயதானவர் போன்று தெரிகிறார். அஜித்தை விட நயன்தாரா பெரியவர் போன்று காட்டப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி
கண்ணான கண்ணே பாடல் வீடியோ ஸ்டில்லில் நயன்தாரா கையில் ஒரு குழந்தை உள்ளது. ஆனால் பார்ப்பதற்கு 4,5 பிள்ளைகள் பெற்று வயதானவர் போன்று தெரிகிறார். பிற படங்களில் கெத்து காட்டும் நயன்தாராவை இப்படி காட்டியுள்ளார்களே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











