அது ஏன் இந்த இளம் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்கவே ஆசைப்படுகிறார்கள்?
சென்னை: இளம் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறார்களே, அது ஏன் என்று தெரியுமா?
நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? மேட்டர் இருக்கே. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் வாழ்வில் இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டும் அவரது கெரியர் வலுவாக உள்ளது.
அவருக்கான மவுசும் அப்படியே உள்ளது.

சிம்பு, பிரபு
முதலில் சிம்புவை காதலித்தார் நயன்தாரா. அந்த காதல் முறிந்த பிறகு சீனியரான பிரபுதேவாவை காதலித்தார். ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலித்ததால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார்.

நடிப்பு
பிரபுதேவாவை திருமணம் செய்ய நடிப்புக்கு முழுக்கு போட்டார். பின்னர் அந்த காதல் முறிந்ததால் மீண்டும் நடிக்க வந்தார்.

இரண்டாவது ரவுண்ட்
முதல் ரவுண்டை விட தற்போது இரண்டாவது ரவுண்ட் நயன்தாராவுக்கு சூப்பராக உள்ளது. வாய்ப்புகளும் வந்து குவியத் தான் செய்கிறது.

இளம் ஹீரோக்கள்
பல இளம் ஹீரோக்கள் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள். தங்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களிடமும் நயன்தாராவை ஒப்பந்தம் செய்யுமாறு கூறுகிறார்கள்.

காரணம்
நயன்தாராவுடன் இளம் ஹீரோக்கள் நடிக்க விரும்புவதற்கு இது தான் காரணம். அவர் ஒரு கதையை தேர்வு செய்ய நேரம் எடுப்பார். ஆனால் தேர்வு செய்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். மேலும் ஹீரோக்களுடனான அந்த கெமிஸ்ட்ரியையும் திரையில் பக்காவாக கொண்டு வந்துவிடுவார்.

சொந்த விஷயம்
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புயலே வீசினாலும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் அதை எல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார்.

சம்பளம்
நயன்தாரா தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெடுவார். அதே போன்று அதற்கு ஏற்றவாறு கோடிகளில் சம்பளமும் கேட்பார்.


Click it and Unblock the Notifications











