Don't Miss!
- News இனி அந்த சைடு போகாதீங்க.. 14 ஆண்டுகளாக முடங்கி கிடந்த.. ஸ்டாலினின் கனவு திட்டம்! போடப்பட்ட பேரிகேட்
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கரீனா கபூரை கலங்க வைத்துள்ள சைப் மகள் சாரா
பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்துவிட்டு தான் தற்போது தம்பதிகளாகவிருக்கின்றனர். சைப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு முதல் மனைவி மூலம் சாரா, இப்ராகிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கரீனா சைபை காதலிக்க ஆரம்பித்தபோது சிறுமியாக இருந்த சாரா தற்போது குமரியாகிவிட்டார். அந்த அழகிய குமரி அண்மையில் நடந்த பேஷன்ஷோ ஒன்றில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அந்த புகைப்படங்களில் சாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் சாராவுக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவர் இதுவரை எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருக்கு பட வாய்ப்புகள் வருவது தான் கரீனாவுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. கரீனாவின் இந்த பதட்டத்திற்கு காரணம் இருக்கிறது. சாரா நடிக்க வந்தால் 'கரீனாவின் மகள் ஹீரோயினாகிவிட்டார்' என்று செய்தியாளர்கள் கொட்டை எழுத்தில் தலைப்பைப் போட்டு செய்தி வெளியிட்டுவிடுவார்கள் அல்லவா அந்த பயம் தான் அம்மணிக்கு. பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் தன்னை ஒரு இளம்பெண்ணின் தாயாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாராம்.