எந்த தைரியத்தில் சமந்தா 'பிகினி' அணிந்தார்?
சென்னை: அஞ்சான் படத்தில் சமந்தா அவ்வளவு தைரியமாக பிகினி அணிந்து நடிக்க காரணம் உள்ளது.
சமந்தா கவர்ச்சிக்கு தடை போடாவிட்டாலும் அவர் இதுவரை பிகினி அணிந்து நடித்தது இல்லை. இந்நிலையில் அவர் சூர்யாவுடன் நடித்த அஞ்சான் படத்தில் முதன்முதலாக பிகினி அணிந்து நடித்தார்.
படத்தை பற்றிவிட அவர் அணிந்த பிகினி பற்றி தான் பலரும் பேசுகிறார்கள்.

சரும வியாதி
சமந்தாவுக்கு சரும நோய் உள்ளது அதனால் அவர் அஞ்சான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்தன. இதை சமந்தா மறுத்தார்.

படுகவர்ச்சி
அஞ்சான் படத்தில் சமந்தாவை பிகினி அணிய வைத்து அவருக்கு சரும வியாதி எதுவும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டனர்.

பிகினி ஏன்?
இதுவரை இல்லாமல் அஞ்சானில் மட்டும் பிகினி அணிய சமந்தா எப்படி ஒப்புக் கொண்டார் என்று தெரியுமா. அதக்கு காரணம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

சந்தோஷ் சிவனா?
என்னது சமந்தா பிகினி அணிய சந்தோஷ் சிவன் காரணமா என்று ஏதாவது எசகுபிசகாக நினைக்க வேண்டாம். பிகினி அணிந்தாலும் தன்னை ஆபாசமாக இல்லாமல் அம்சமாக காட்டுவார் சிவன் என்ற நம்பிக்கையில் தான் அந்த காட்சியில் நடித்திருக்கிறார் சமந்தா.


Click it and Unblock the Notifications











