ஸ்ருதி ஹாஸன் படம் ஊத்திக்கிச்சே: கேக் வெட்டி கொண்டாடிய தமன்னா
ஹைதராபாத்: ஸ்ருதி ஹாஸன் நடித்த தெலுங்கு படமான ராமய்யா வஸ்தாவய்யா படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதை தமன்னா கேக் வெட்டி கொண்டாடியுள்ளாராம்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், தமன்னா. அவர்கள் இருவருக்கும் ஆகவே ஆகாதாம். ஒருவரின் பட வாய்ப்பு திடீர் என்று மற்றொருவருக்கு சென்று விடுகிறது.
இதனால் இருவரும் எலியும், பூனையுமாக உள்ளார்களாம்.

கப்பார் சிங்
கப்பார் சிங் படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக தமன்னா நடிக்கவிருந்தார். ஆனால் திடீர் என்று அந்த வாய்ப்பு ஸ்ருதி ஹாஸனுக்கு சென்றுவிட்டது. படமும் சூப்பர் ஹிட்டானது. இது தமன்னாவை கடுப்பாக்கிவிட்டது.

ராமய்யா வஸ்தாவய்யா
ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் சமந்தா தவிர மற்றொரு நாயகியாக தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம்.

ஸ்ருதிக்கு சென்ற வாய்ப்பு
ராமய்யா வஸ்தாவய்யா வாய்ப்பு ஸ்ருதி ஹாஸனுக்கு சென்றுவிட்டது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

கேக் வெட்டி கொண்டாட்டம்
ராமய்யா வஸ்தாவய்யா ஓடாததை தமன்னா கேக் வெட்டி கொண்டாடி, இனிப்புகள் வழங்கியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன.

இருவருமே
ஸ்ருதியும், தமன்னாவும் ஒருத்தரின் தோல்வியை மற்றொருவர் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











