»   »  த்ரிஷா ஏன் மாப்பிள்ளை வருணுக்கு 'நோ' சொன்னார் தெரியுமா?

த்ரிஷா ஏன் மாப்பிள்ளை வருணுக்கு 'நோ' சொன்னார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா தனது வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்ததன் உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.

த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திருமணம் தான் எப்பொழுது என்று தெரியவில்லை. த்ரிஷா படங்களில் பிசியாக இருப்பதால் அடுத்த ஆண்டு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் த்ரிஷா வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா பல படங்களில் பிசியாக இருப்பதால் வருண் மணியன் ஜெய்யை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்தார். இதையடுத்து டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜெய்

ஜெய்

ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் ஓடவில்லை. மேலும் அவர் சிங்கிள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓட மாட்டேன் என்கிறதாம். இந்த காரணத்தால் தான் த்ரிஷா ஜெய்யுடன் நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கிசுகிசு

கிசுகிசு

ஜெய் எந்த படத்தில் நடித்தாலும் அவருக்கும் ஜோடியாக நடிக்கும் நடிகைக்கும் காதல் என்று கிசுகிசு தீயாக பரவிவிடும். இந்நிலையில் அவருடன் நடித்தால் தன் பெயரும் அந்த கிசுகிசு பட்டியலில் சேர்ந்துவிடும் என்று பயந்து தான் நடிக்க மறுத்தாராம் த்ரிஷா.

வருண்

வருண்

படத்தில் நடிக்க முடியாததற்கான காரணங்களை த்ரிஷா வருண் மணியனிடம் எடுத்துக் கூறினாராம். நிலைமையை புரிந்த கொண்ட அவரும் பரவாயில்லை நாங்கள் வேறு ஹீரோயினை நடிக்க வைக்கிறோம் என்றாராம்.

அப்போ டாப்ஸி கதி?

அப்போ டாப்ஸி கதி?

த்ரிஷா நழுவிக் கொண்டார் பாவம் இந்த டாப்ஸி பொண்ணு தான் சிக்கிக்கிச்சு. அவருக்கும், ஜெய்யுக்கும் இடையே காதல் என்றும் இன்னும் என்ன வதந்தியை எல்லாம் அந்த ஹீரோ பரப்ப உள்ளாரோ என்று கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.

English summary
Trisha refused to act with Jai in a movie that is produced by her fiancee Varun Manian. It is told that Trisha rejected this offer mainly because of the hero.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil