மீரா சோப்ரா (எ) நிலாவை ஒதுக்கும் அக்கா பிரியங்கா சோப்ரா?
மும்பை: இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது தங்கையான மீரா சோப்ராவிடம் இருந்து தள்ளியே இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அடுத்த சிம்ரன் இவர் தான் என்று எஸ்.ஜே.சூர்யா வடநாட்டில் இருந்து அழைத்து வந்த நடிகை நிலா. எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே பட நாயகி இந்த நிலா தான். அவர் தென்னிந்திய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் குர்காவ்னில் 28 வயது பெண் தூக்கில் பிணமாகத் தொங்கிய வழக்கில் நிலாவின் பெயர் அடிபட்டது. அந்த பெண்ணின் கணவருக்கு நிலாவுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் தான் அவரை தூக்கில் தொங்கவிட்டதாக இறந்த பெண்ணின் சகோதரி தெரிவித்தார்.
இந்நிலையில் நிலா தனது பெயரை இயற்பெயரான மீரா சோப்ரா என்றே மாற்றிவிட்டு பாலிவுட்டில் நுழைந்துவிட்டார்.

வம்பே வேண்டாம்
கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி பெயரைக் கெடுத்துக் கொண்டதால் மீராவிடம் இருந்து அவரது அக்காவும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா மற்றும் தங்கை பரினீத்தி சோப்ரா ஆகியோர் தள்ளியே உள்ளனராம்.

பரினீத்தி
மீரா எனக்கு தூரத்து சொந்தம். நாங்கள் பார்த்துக் கொள்வதோ, பேசுவதோ இல்லை என்று நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.

பரினீத்தி, பார்பி
பிரியங்கா சோப்ரா தனது தங்கைகளில் பரினீத்தி மற்றும் பார்பி ஹன்டாவுக்கு மட்டும் உதவி செய்வதாகவும், மீராவை கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

தங்கைகள்
பாலிவுட்டில் எனது தங்களான மீரா மற்றும் பரினீத்தியை நான் பாதுகாப்பேன் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











