சார் எப்போவோ அது நடந்தது.. அதுக்கப்புறம் இல்லவே இல்லையே.. ரொம்ப வருத்தப்பட்ட திரிஷா
சென்னை: நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதும் அவர் ஹிட் படங்களை கொடுப்பதால் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். மேலும் பல படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் தெரிகிறது.
திரிஷாவின் கரியரில் இடையே பயங்கரமான சறுக்கல் ஏற்பட்டது. அப்போது பலரும் இனிமேல் திரிஷாவின் மார்க்கெட் அவ்வளவுதான் என்று கொக்கரித்தார்கள். ஆனால் அவரோ 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து தரமான கம்பேக்கை கொடுத்திருந்தார். அதன் பலனாக கடந்த வருடத்தில் மட்டும் மூன்று பெரிய படங்களில் நடித்தார். அவற்றில் அஜித்துடன் மட்டும் இரண்டு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விதான் இருந்தாலும் டாப்: அஜித்துடன் நடித்த குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் குட் பேட் அக்லி மட்டும்தான் வெற்றி பெற்றது. கமலுக்கு ஜோடியாக நடித்த தக் லைஃப் திரைப்படமோ மோசமான ட்ரோல்களை சந்தித்தன. அதிலும் திரிஷா ஏற்றிருந்த கேரக்டரும், சுகர் பேபிக்கு அவர் ஆடிய நடனமும் பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் சோஷியல் மீடியாவில் கிளப்பின.
கருப்பு படம் மெகா ஹிட்: இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; உலகம் முழுவதும் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. அடுத்ததாக சிரஞ்சீவியுடன் அவர் நடித்திருக்கும் விஸ்வம்பரா திரைப்படமும் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கிறது. இவை தவிர்த்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சில கதைகளில் அவர் கமிட்டாகியிருக்கிறார் என்றும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்றும் சொல்லப்படுகிறது.
திரிஷா விவரம்தான்: திரிஷாவை பொறுத்தவரை தன்னுடைய ஆரம்பகட்டத்தில் சராசரி ஹீரோயினாக நடித்தாலும்; சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களிலும் நடித்தார். அப்படி வந்ததுதான் அபியும் நானும். அதனை ராதாமோகன் இயக்கியிருந்தார். தமிழின் மிகச்சிறந்த பத்து ஃபீல் குட் படங்களில் இந்தப் படம் எப்போதுமே நிரந்தரமாக இருக்கும். திரிஷாவுக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது அந்தப் படம்.
தனஞ்ஜெயன் பேட்டி: இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "அபியும் நானும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது திரிஷாவை நான் பார்த்தாலும் அவர் என்னிடம், 'சார் எப்போவோ உங்கள் தயாரிப்பில் நடித்தது. அதற்கு பிறகு நடிக்கவே இல்லையே' என சொல்வார். ஹீரோயின்
சென்ட்ரிக் படங்கள் எடுக்கலாம். ஆனால் அதற்கு ஆடியன்ஸ் ரொம்பவே குறைந்துவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
