தெலுங்கு பட டப்பிங் விவகாரம்: ஹன்சிகா ஏன் குதிக்கிறார்னு தெரியுமா?
சென்னை: சீதாராமுல கல்யாணம் லங்கலோ தெலுங்கு படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவதற்கு ஹன்சிகா ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்று தெரியுமா?
கடந்த 2010ம் ஆண்டில் ஹன்சிகா நடித்த தெலுங்கு படம் சீதாராமுல கல்யாணம் லங்கலோ. இப்படத்தை ஹைதராபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லா விஜயபிரசாத் தயாரித்தார்.
தற்போது இப்படத்தை சுந்தரலட்சுமி ரவுடி கோட்டை என்ற பெயரில் தமிழில் டப் செய்கிறார். இதை எதிர்த்து பேட்டி கொடுத்த ஹன்சிகா இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார்.

வழக்கு போடுவோம்
ஹன்சிகா நடிகர் சங்கத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெறாவிட்டால் அவர் மீது வழக்கு போடுவோம் என்று சுந்தரலட்சுமி தெரிவித்திருந்தார்.

ஹன்சிகா ஏன் இப்படி?
தெலுங்கு படத்தை தமிழில் டப் செய்வதற்காக ஹன்சிகா ஏன் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று பலரும் நினைக்கின்றனர். அம்மணி காரணத்தோடு தான் எதிர்க்கிறார்.

TDS சான்றிதழ்
படத்தின் டிடிஎஸ் சான்றிதழை தருமாறு ஹன்சிகா விஜயபிரசாத்திடம் கேட்டாராம். ஆனால் அவர் சான்றிதழை தரவில்லையாம். இதையடுத்து அம்மணி தான் படத்தில் அணிந்திருந்த ஆடைகளை மும்பைக்கு கொண்டு சென்றுவிட்டாராம்.

ஆடை தகராறு
மும்பைக்கு எடுத்துச் சென்ற ஆடைகளை திருப்பிக் கொடுக்குமாறு தயாரிப்பாளர் கேட்க அவரும் அவற்றை திருப்பிக் கொடுத்துள்ளார். பதிலுக்கு அவர் கேட்ட சான்றிதழை மட்டும் தரவில்லையாம். அந்த எரிச்சலில் தான் புகார் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஓவர் கவர்ச்சி
டப் செய்யப்படும் படத்தில் ஹன்சிகா தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். தற்போது தமிழில் முன்னணி நடிகையாகிவிட்ட நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆனால் இங்கும் கவர்ச்சியில் தாராளம் காட்ட வேண்டி வருமே என்று அஞ்சுகிறாராம்.

அது என்ன ஓரவஞ்சனை?
அது என்னமோ தெரியவில்லை நடிகைகளில் பலர் தமிழ் படங்களுக்கு என்றால் கவர்ச்சியில் ஒரு லிமிட் தெலுங்கு படங்களுக்கு என்றால் ஒரு லிமிட் வைத்துள்ளனர். எங்களுக்கு தமிழ் ரசிகர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறிவிட்டு ஆந்திராவில் மட்டும் ஓவர் கவர்ச்சி காட்டுவது ஏன் என்று தான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











