நான் பிகினி போட்டா உனக்கேன் பொறாமை?... பொங்கிய நீது சந்திரா

By Mayura Akilan

நான் கவர்ச்சியா இருக்கேன்... பிகினி போடுறேன், அதுல உனக்கென்ன வந்துச்சு... ஏன் பொறாமைபடணும் என்கிற ரீதியில் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குமுறியுள்ளார் நடிகை நீது சந்திரா.

அதாகப்பட்டது... தன்னுடைய கிளாமரான பிகினி படத்தைப் பார்த்து சும்மா லைக்ஸ் அள்ளும் என்று எதிர்பார்த்தவருக்கு எதிர்மறையான கமெண்ட் விழவே நீது சந்திராவிடமிருந்து இந்த குமுறல் வெளிப்பட்டுள்ளது.

குடும்ப குத்துவிளக்கு

குடும்ப குத்துவிளக்கு

யாவரும் நலம் படத்தில் குடும்ப பாங்காக நடித்த நீது சந்திரா, ரசிகர்களின் கவனத்தை கவரவில்லை என்ற குறை இருந்தது.

குத்துப்பாட்டு நாயகி

குத்துப்பாட்டு நாயகி

இந்நிலையில் யுத்தம் செய்' படத்தில் குத்து பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம்போட்டு திரும்பி பார்க்க வைத்தார்.

வில்லி வேடத்தில்

வில்லி வேடத்தில்

ஆதிபகவன் படத்தில் வில்லி வேடம், சேட்டை, திலகர் படங்களில் மீண்டும் குத்தாட்டம் போட்டார்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

தற்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். இந்நிலையில் டு பீஸ் (பிகினி) உடை அணிந்து கடற்கரையோரத்தில் ஹாயாக நின்றபடி போஸ் தரும் தனது படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் அப்லோட் செய்தார்.

திட்டி தீர்த்த நெட்டிசன்கள்

திட்டி தீர்த்த நெட்டிசன்கள்

அசத்தல் என்ற கமென்ட் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு ஷாக் காத்திருந்தது. பலர் நீதுவை திட்டித்திட்டி சரமாரியாக கமென்ட் போட்டனர்.

நீக்கிய நீது

நீக்கிய நீது

உடனே அப்செட் ஆன நீது சந்திரா, அந்த படத்தை இணைய தளத்திலிருந்து நீக்கினார் அதற்கு பதிலாக தனது கோபத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

உனக்கென்ன வந்துச்சு

உனக்கென்ன வந்துச்சு

‘எனது தோற்றம் கவர்ச்சியாக இருக்கிறது. அதனால் இந்த உடை அணிய முடிகிறது. உங்களுக்கும் அதுபோல் தோற்றம் இருந்தாலும் நீங்கள் டு பீஸ் போட்டுக்கொள்ளுங்கள். எதற்கு பொறாமை கொள்கிறீர்கள்.

தாங்க முடியலைப்பா

தாங்க முடியலைப்பா

இனிமேல் இதுபோல் எதையும் உங்களுக்காக நான் அப்லோட் செய்ய மாட்டேன். என்னவொரு கெட்ட வார்தை.... தாங்க முடியவில்லை... நீங்கள் என்னை விரும்பாவிட்டால் விட்டுவிடுங்கள்.

என்ன தெரியும் உங்களுக்கு?

என்ன தெரியும் உங்களுக்கு?

எனது உடல் தோற்றம் மட்டும்தான் உங்களுக்கு தெரிகிறது. அதற்கும் கூடுதலாக மார்ஷல் கலை, நாடகம், நடிப்பு என பல திறமைகள் என்னிடம் உள்ளது'. இவ்வாறு நீது சந்திரா ஆற்றாமையை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X