அதிக சம்பளம் கொடுத்ததால் கமல் ஜோடியாக ஒப்புக் கொண்ட காஜல்!
கமலுடன் ஆரம்பத்தில் நடிக்க மறுத்த காஜல் அகர்வால், பின்னர் ஒப்புக் கொண்டது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பது பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் படம் 'உத்தம வில்லன்'.
கமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

அனுஷ்கா
கமல் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முதலில் திட்டமிட்டனர்.
சரித்திரப் பின்னணியில் உருவாகும் தெலுங்குப் படங்களில் அனுஷ்கா பிஸியாக இருப்பதால், காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

முதலில் மறுப்பு
தெலுங்கில் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதில்லை. தமிழில் நடித்தால் தெலுங்கில் பிரச்னை எழும் என்று சொல்லி முதலில் மறுத்துவிட்டாராம் காஜல்.

ரூ 2 கோடி
அதற்குப் பிறகு, லிங்குசாமி காஜலிடம் பேச, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று காஜல் ஒப்புக்கொண்டார்.
உண்மையில் , காஜல் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அதிகபட்ச சம்பளம்தான் என்று தெரிய வந்துள்ளது. லிங்குசாமி 2 கோடி சம்பளம் தருவதாக சொன்னதும், காஜல் கமலுடன் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

நயன்தாராவை விட அதிகம்
இது நயன்தாரா, அனுஷ்கா போன்றவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா ராணி, ஆரம்பம் போன்ற படங்களில் நயன்தாராவுக்கு ரூ 1.5 கோடி வரை தரப்பட்டதுதான் அதிகபட்ச சம்பளம்.


Click it and Unblock the Notifications











