அதுக்குள்ள பிரேக்கப்னு கிளப்பி விட்டுட்டீங்களே.. நயனுக்கும் விக்கிக்கும் இடையில நடந்தது இதுதானாம்!

சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனை பிரிந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் நயன்தாரா வாங்கும் சம்பளமும் டாப்புதான்.

ஏற்கனவே இரண்டு காதல்களில் தோல்வி கண்ட நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

அதே நேரத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் லிவிங் டுகெதராக வாழ்ந்து வருவதாகவும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜோடியாக ஆட்டம்

ஜோடியாக ஆட்டம்

இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் ஊர்சுற்றும் போட்டோக்கள் வெளியாகி சிங்கிள் பசங்களை காண்டாக்கும். பிறந்தநாள், கிறிஸ்துமஸ் என ஜோடியாக வெளிநாடுகளில் ஆட்டம் போட்ட போட்டோக்களை வெளியிட்டனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நயன்தாரா மட்டும் தனியாக இருந்த போட்டோ வெளியானது. எப்போது மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை போடும் நயன் - விக்கி ஜோடி தனியாக போட்டோக்களை போட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

தனியாக வந்த நயன்

தனியாக வந்த நயன்

அதோடு அண்மையில் நடைபெற்ற ஜீ சினி விருதுகள் விழாவில் நடிகை நயன்தாரா தனியாக பங்கேற்றார். எல்லா நிகழ்ச்சியிலும் விக்னேஷ் உடன் ஜோடியாக பங்கேற்கும் நயன்தாரா விருது விழாவில் தனியாக பங்கேற்றதும் பல கேள்விகளை எழுப்பியது.

போட்டோ எடுத்ததே அவராம்

போட்டோ எடுத்ததே அவராம்

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனியாக இருக்கும் போட்டோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா மட்டும் தனியாக இருக்கும் அந்த போட்டோவை எடுத்ததே அவரது காதலரான விக்னேஷ் சிவன் தானாம்.

பரவிய தகவல்

பரவிய தகவல்

அதனால் தான் அந்த போட்டோவில் நயன்தாரா மட்டும் இருக்கிறாராம். இந்த விஷயம் தெரியாமல் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரியும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகிவிட்டது.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

எது எப்படியோ இருவரும் விரைவில் திருமணம் செய்துகொண்டால் இதுபோன்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X