கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை.. இது உங்களுக்குத் தான் ஓவியா பொருந்தும்!

காஞ்சனா 3 படத்தில் ஓவியாவின் கதாபாத்திரத்தால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Recommended Video

Actress Oviya: காஞ்சனா 3 படத்திலும் ஓவியாவின் கதாபாத்திரம் குறிப்பிடத்தகுந்த வகையில் இல்லை- வீடியோ

சென்னை: காஞ்சனா 3 படத்திலும் ஓவியாவின் கதாபாத்திரம் குறிப்பிடத்தகுந்த வகையில் இல்லாததால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

களவாணி படம் மூலம் அறிமுகமான போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியே விரைவில் தொடங்க உள்ளது. ஆனாலும், முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவிற்கு மற்ற போட்டியாளர்களை விட இப்போதும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதத்தால், கவரப்பட்டு, பரிதாபப்பட்டு, அன்பு கொண்ட ரசிகர்கள், தொடர்ந்து அவரின் படங்களை எதிர்பார்க்கின்றனர்.

பிக் பாஸ் புகழ்:

பிக் பாஸ் புகழ்:

ஆனால், இதை தனது பொறுப்பாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் ஓவியா என்றே சொல்ல வேண்டும். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வந்தது. ஆனால், அது எதுவும் உண்மையில்லை என்பது கொஞ்சநாளிலேயே உறுதியானது.

சிலுக்குவார் பட்டி சிங்கம்:

சிலுக்குவார் பட்டி சிங்கம்:

அவர் ஏறக்குறைய சிறப்புத் தோற்றத்தில் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. ஏறக்குறைய ஐயிட்டம் கேர்ளாக அப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற விமர்சனமே அதிகமாக இருந்தது. ஆனால், அப்படம், தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் நடித்தது என சமாளித்தார் ஓவியா.

90 எம் எல் படம்:

90 எம் எல் படம்:

சரி என, அடுத்ததாக அவர் நடிக்கும் படத்திற்காக காத்திருந்தனர் ரசிகர்கள். அடுத்ததாக வெளி வந்த 90 எம் எல் படமும் ஓவியாவிற்கு எதிர்மறையான விமர்சனத்தையே பெற்றுத் தந்தது. அது வெறும் நடிப்பு என ஓவியா சமாளித்தாலும், சமூக பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஓவியாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

காஞ்சனா 3:

காஞ்சனா 3:

இந்நிலையில் தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காஞ்சனா 3 படம் கடந்த வாரம் ரிலீசானது. படம் வசூல் ரீதியாக வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது. ஆனால், வழக்கம் போல் இதிலும் ஓவியாவின் கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. லாரன்ஸின் மாமா பெண்ணாக நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். கதையில் அவர் கதாபாத்திரத்திற்கென முக்கியத்துவம் இல்லை.

ஏமாற்றம்:

ஏமாற்றம்:

இவையெல்லாம் ஓவியா ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இப்படியே போனால், கூடிய சீக்கிரம் துணை நடிகை ரேஞ்சுக்கு ஓவியா வந்து விடுவார் என்பதே அவரது ரசிகர்களின் பெரும் கவலையாக உள்ளது. இப்போதே அவரது ரசிகர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பார்ப்போம் களவாணி 2 படமாவது அவருக்கு கை கொடுக்கிறதா என.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X