ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவராச்சே.. எத்தனை நாள் ஓடி ஒளிவார்? - ராதா

By Shankar

சென்னை: ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர்... அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார்... அதான் வழக்கை வாபஸ் பெற்றேன், என்றார் நடிகை ராதா.

பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பண மோசடி புகார்களைக் கூறி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுத்தார் சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா.

Why Radha withdrawn her complaints?

ஆனால் நேற்று இரவு திடீரென தனது புகார்கள் அனைத்தையும் வாபஸ் பெற்றார். போலீசார் இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து நடிகை ராதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பைசூல் எனது கணவர்தானே! ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன்.

ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை," என்றார்.

உங்களுக்குள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொண்டீர்களா.. அல்லது ஏதாவது மிரட்டல் வந்ததா என்று கேட்டபோது, பதில் கூற மறுத்து போனையும் சுவிட்ச் ஆப் செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X