பாஸ், நடிகை ராணி முகர்ஜி கர்ப்பமாமே?
மும்பை: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி தீயாகப் பரவியது.
நடிகை ராணி முகர்ஜி இயக்குனர் ஆதித்யா சோப்ராவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். ராணிக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்துள்ளதாகவும் அதனால் அவர் படங்களை விட குழந்தை பெற முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ராணி கர்ப்பம் என்ற செய்தி தீயாகப் பரவியது. அந்த வதந்தி பரவ என்ன காரணம் என்று பார்ப்போம்.

வெயிட்
ராணி தான் நடித்துள்ள மர்தானி படத்தை விளம்பரப்படுத்த நடிகை மாதுரி தீக்சித் நடுவராக உள்ள ஜலக் திக்லா ஜா டான்ஸ் ஷோவுக்கு வந்தார்.

படி ஏற
நிகழ்ச்சிக்கு வந்த ராணியால் படி ஏற முடியவில்லை. இதையடுத்து மாதுரி கை கொடுத்தார். இதனால் ராணி கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் நினைத்தனர்.

தாமதம்
மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்ததால் ராணி ஜலக் திக்லா ஜா நிகழ்ச்சிக்கு 2 மணிநேரம் தாமதமாக வந்ததும் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைக்க வைத்தது.

ஆடை
ராணி கர்ப்பத்தால் பெரிதாகியுள்ள வயிறை மறைக்க கருப்பு நிற அனார்கலி அணிந்து வந்ததாக கூறப்பட்டது.

குழந்தைகள்
எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ராணி அண்மையில் தெரிவித்ததும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி பரவ காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications











