அனிருதா ஸ்ரீகாந்த் மீது சம்யுக்தாவுக்கு காதல் வர இதுதான் காரணம்.. அட அவங்களே சொல்லிருக்காங்க

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். புது மண தம்பதிக்கு பலரும் வாழ்த்து சொல்லிவரும் சூழலில்; அனிருதாவை காதலித்ததற்கான காரணத்தை சம்யுக்தா சொன்ன வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

கோவையை சேர்ந்த சம்யுக்தா சண்முகநாதன் மாடலிங்கில் நுழைந்து விளம்பர படங்களில் நடித்தார். அப்போது அவருக்கு இருந்த அழகாலும் திறமையாலும் கோலிவுட் கதவுகள் திறந்தன. அதனையடுத்து சினிமாவுக்குள் வந்த அவர் குருமூர்த்தி, காஃபி வித் காதல், காரி, மை டியர் பூதம், வாரிசு என பல படங்களில் நடித்தார். வாரிசு படத்தில் விஜய் ஹீரோ என்பதால் கண்டிப்பாக அப்படம் வெற்றி பெற்று மேலும் வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று நம்பினார்.

லீடு ரோலில் சம்யுக்தா: ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில்கூட மெட்ராஸ் மாஃபியா கம்பெனி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். ஆனால் இப்படமும் அவருக்கு பெரிய திருப்புமுனையை தரவில்லை. தொடர்ந்து கதைகள் கேட்டு இன்னும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது.

Why Samyuktha Shanmuganathan Fell in Love with Anirudha Srikanth Her Viral Video Goes Trending
Photo Credit:

முதல் திருமணம்: இதற்கிடையே வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளையான கார்த்திக் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு ராயன் என்ற மகனும் பிறந்தார். சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கை; கார்த்திக்கின் முறை தவறிய நடவடிக்கைகளால் பிரச்னையை சந்தித்தது. அதாவது துபாயில் அவர் இன்னொரு பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சம்யுக்தாவுக்கு தெரியவர; உடனடியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

இரண்டாவது திருமணம்: கார்த்திக்கை பிரிந்த பிறகு சிங்கிளாக இருந்த அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் பழகுவதற்கு விஜே பாவனாதான் முதல் காரணமாக இருப்பார் என்று கருதப்படுகிறது. ஏனெனில் சம்யுக்தாவும் பாவனாவும் நெருக்கமான தோழிகள். அதுமட்டுமின்றி அனிருதாவுடன் சேர்ந்து விஜே பாவனா கிரிக்கெட் கமெண்ட்ரியும் செய்வார். சூழல் இப்படி இருக்க இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைக்க சில சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான். இந்நிலையில் அனிருதாவை ஏன் காதலிக்க ஆரம்பித்தேன் என்பது குறித்து சம்யுக்தா பேசிய வீடியோ இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், "வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையை சிரித்துக்கொண்டே ரன் செய்யும் மாதிரி ஒருவர் வாழ்க்கை துணையாக வந்தால் அது நன்றாக இருக்கும். அதுதான் உலகத்தின் சிறந்த இடமாகவும் இருக்கும்" என்று அனி மீதான காதல் உருவானதற்கான காரணத்தை கூறினார். மேலும் பேசிய அவர், " ஒரு பெர்சனல் பிரச்னையின் போது அதுதான் நமது மூளையை ஆக்கிரமிக்கும். ஏன் இப்படி ஆனது அப்படி ஆகவில்லை என்று இருக்கும். வாழ்க்கையே ஒரு வட்டம்தானே. அதையெல்லாம் கடந்துதான் போக வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X