என் மூக்கு தான் அளவாக, அம்சமாக இருக்கே, நான் ஏன் ஆபரேஷன் செய்யணும்?: சமந்தா
சென்னை: தான் அறுவை சிகிச்சை செய்து மூக்கை அழகாக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சிம்பு என்றாலே சும்மாவே கிசுகிசு எழுதுவார்கள் என்று அவரே ஒரு படத்தில் தெரிவித்திருப்பார். ஆனால் அவரை விட சமந்தாவை பற்றி தான் அதிக அளவில் கிசுகிசுவருகிறது.
அது ஏன் சமந்தாவை பற்றி மட்டும் என்று கேட்டால் நெருப்பில்லாமல் புகையுமா என்று கூறுகிறார்கள்.

மூக்கு
சமந்தா லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து மூக்கை அழகாக்கியதாகவம், மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

சமந்தா
மூக்கு அசிங்கமாக இருந்தால் தானே அறுவை சிகிச்சை மூலம் அழகாக்க வேண்டும். எனக்கு தான் அழகான மூக்கு உள்ளதே என்று கேட்கிறார் சமந்தா.

அம்சமா
என் மூக்கு அளவாக, அம்சமாக இருக்கிறது. அதை ஏன் நான் அறுவை சிகிச்சை செய்து அழகாக்க வேண்டும் என்கிறார் சமந்தா.

வதந்தி
என்னை பற்றி அடுத்தடுத்து வரும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான் என்று சமந்தா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











