பவர் பட பாடல் வெளியீடு விழா புறக்கணிப்பு: திரிஷா மன்னிப்பு

By Mayura Akilan

புனித்ராஜ்குமாரின் பவர் பட ஆடியோ வெளியீட்டு விழா பங்கேற்க முடியாமல் போனதற்கான காரணத்திற்கு நடிகை திரிஷா விளக்கம் அளித்துள்ளார். தொடர் படப்பிடிப்புகள் இருந்ததே விழாவிற்கு வரமுடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ள திரிஷா இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜோடியாக 'பவர்' என்ற கன்னட படத்தில் திரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் பெல்லாரியில் நடந்தது. இதில் திரிஷா பங்கேற்கவில்லை.இதனால் கன்னட பட உலகினர் திரிஷாவை கண்டித்தனர்.

இந்த நிலையில் பெங்களூர் சென்ற திரிஷா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதை மேற்கொண்டு படியுங்களேன்.

நான் ரொம்ப பிசி

நான் ரொம்ப பிசி

‘பவர்' கன்னட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வர இயலவில்லை. வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்ததால் அந்த விழாவில் பங்கேற்க முடியாமல் போனது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவது வீடு

இரண்டாவது வீடு

‘பவர்' கன்னட படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூர் நகரம் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. நான்கு மணி நேரத்தில் இந்த நகரத்துக்கு வந்துவிட முடியும் என்று திரிஷா கூறினார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில்

ஆடியோ வெளியீட்டு விழாவில்

தமிழ், தெலுங்கு, கன்னட படஉலகில் கதாநாயகிகள் அவர்கள் நடிக்கும் படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், சிலர் இதை கடைபிடிப்பதில்லை.

புறக்கணிக்கும் நடிகைகள்

புறக்கணிக்கும் நடிகைகள்

தமிழ் படங்களில் நடிக்கும் பல நடிகைகள் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு வருவது இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

சர்ச்சையில் திரிஷா

சர்ச்சையில் திரிஷா

பட விழாக்களை புறக்கணிக்கும் நடிகைகளுக்கு பாதி சம்பளத்தை கொடுக்க கூடாது என்றும் வற்புறுத்தப்படுகிறது. நடிகை திரிஷாவும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். எனவேதான் அவசரம் அவசரமாக விளக்கம் அளித்துள்ளார் திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X