»   »  எப்போதோ சொல்ல வேண்டிய நன்றியை இப்போது சொன்ன த்ரிஷா

எப்போதோ சொல்ல வேண்டிய நன்றியை இப்போது சொன்ன த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க முடியாது என்பார்கள். அது உண்மை தான் போல... இந்த நடிகைகள் உயரத்தில் கொடிகட்டி பறந்துவிட்டு வாய்ப்பில்லாமல் இருக்கும்போது என்ன செய்வதென்றே தெரியாமல் தவிப்பார்கள். இயக்குநர்கள், ஹீரோக்களுக்கு ஐஸ் வைப்பார்கள்.

அந்த வகையில் நயன்தாரா ஒரு சரியான ரூட்டைப் பிடித்து இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும், லீட் ரோல்களிலும் வலம் வருகிறார். அனுஷ்காவுக்கு தெலுங்கில் சரித்திர படங்கள் இருக்கின்றன. இதில்

Why Trisha retweeted Mahesh Babu's old tweet?

த்ரிஷாவுக்கு மட்டும் தான் சரியான ரூட் கிடைக்கவில்லை. அவர் லீட் ரோலில் நடித்த நாயகி படமும் தெலுங்கில் சரியாக போகவில்லை. தமிழில் கபாலிக்கு பின்னர் தான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் மகேஷ்பாபு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட்டை எடுத்து இப்போது ரீட்விட் செய்திருக்கிறார் த்ரிஷா. அதில் மகேஷ்பாபு என்னுடைய ஹீரோயின்களிலேயே எனக்கு ஃபேவரிட் த்ரிஷாவும் அனுஷ்காவும்தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது அதனை ரீட்விட் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கண் சிமிட்டுகிறார்கள் ட்விட்டர்வாசிகள்!

Why Trisha retweeted Mahesh Babu's old tweet?
English summary
Trisha has retweeted Mahesh Babu's 6 years old tweet recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil