2வது திருமணத்துக்குப் பிறகு சாதிப்பாரா சமந்தா?.. ‘எங்கள் தங்கம்’ படம் இந்த வாரம் வசூலில் மிரட்டுமா?
சென்னை: நடிகை அமலா பால் 2வது திருமணத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் போராடி வருகிறார். குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அதை வளர்த்து வரும் அவர் தொடர்ந்து சினிமா விழாக்களிலும் தென்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்' படம் இந்த வாரம் ரிலீஸாக காத்திருக்கிறது. படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் பாட்ஷா, பிளாஸ்ட் போல பட்டாசாக உள்ளது என பாராட்டி வருகின்றனர்.

தெலுங்கில் 'மா இன்டி பங்காரம்' ஆக உருவாகியுள்ள சமந்தாவின் படம் தமிழில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் படமான 'எங்கள் தங்கம்' டைட்டிலில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ள நிலையில், சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து நடிகை சமந்தா புரமோஷனை ஆரம்பிக்கிறார்.
கடைசியாக விக்னேஷ் சிவன் படம்: தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தான் சமந்தா கடைசியாக நடித்த படம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து அந்த படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தின் கதையை போலவே விக்னேஷ் சிவன் இந்த படத்தை உருவாக்கி இருந்தார். கதீஜா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சமந்தா உடல் நலக்குறைவு, விவாகரத்து பிரச்னை, 2ம் திருமணம் என பல கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் ஹீரோயினாக அதிரடி காட்டவுள்ளார்.
எங்கள் தங்கம் வசூல் அள்ளுமா?: நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, காந்தாரா 2 வில்லன் குல்ஷன் தேவையா, கெளதமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம் இந்த வாரம் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படத்துடன் போட்டியாக வெளியாகிறது. சென்னை பொண்ணான சமந்தா சோலோ ஹீரோயினாக நடித்த யசோதா படமே நல்ல வசூலை ஈட்டியது. இந்நிலையில், எங்கள் தங்கம் படமும் அவருக்கு சரியான கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஷனில் அதிரடி: சமீபத்தில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் சாதாரண குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி சண்டை செய்து தங்களுக்கு எதிராக வரும் பிரச்னையை சமாளிக்கின்றனர் என்கிற கதையை எடுத்து பாக்ஸ் ஆபீஸில் பிளாஸ்ட்டாக ஓடியதோ அதே போல சாதாரண குடும்பத்துப் பெண்ணாக வாக்கப்பட்டு வரும் சமந்தாவுக்கு பாட்ஷா போல பேக் ஸ்டோரி ஒன்றிருக்க, அந்த குடும்பத்துக்கு வரும் பிரச்னைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. சமந்தா உடல்நலக் கோளாறுகளை எல்லாம் தாண்டி மீண்டும் ஜிம்முக்கு சென்று ஃபிட்டான நிலையில், இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் எல்லாம் செய்து அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications