Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கல்யாணப் பெண்ணாய் ஜொலிக்கப் போகும் கமல் பொண்ணு அக்ஷரா!
டெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள மணப்பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் பேஷன் ஷோவில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரீனா டாக்கா.
இவர் இந்தியா மற்றும் உலகளவில் நடக்கும் பெரும்பாலான பேஷன் ஷோக்களில் தனது தனித்துவமான ஆடை வடிவமைப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
மணமகளுக்கான அசத்தல் ஆடைகள்:
இவர் டெல்லியில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடக்கவிருக்கும் மணப்பெண்களுக்கான ஆடை வடிவமைப்புக்கான ஃபேஷன் ஷோவில் தன்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்புகளை பார்வையாளர்களுக்கு காண்பிக்க உள்ளார்.
கமல் பொண்ணுதான் டாப்பர்:
இந்த பேஷன் ஷோவில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், ரீனாவின் ஆடை வடிவமைப்புகளுக்கு ஷோ ஸ்டாப்பர் ஆக வலம் வரவிருக்கிறார்.
பூக்களால் நிறையும் ஆடைகள்:
ரீனா டாக்கா தனது ஆடையை பூக்களால் வடிவமைக்க இருக்கிறார். தன்னுடைய இந்த மணப்பெண்களுக்கான பிரத்யேக தொகுப்பில் முதன்மை மாடலாக அக்ஷரா ஹாசன் இடம்பெற இருப்பதாக ரீனா தெரிவித்தார்.
அப்பாவி அழகு அக்ஷரா ஹாசன்:
பிரபல இந்தி நடிகை ஆலியா பட் அல்லது அக்ஷராதான் இந்த தொகுப்பின் மாடலாக இருக்க வேண்டும் என ரீனா விரும்பியுள்ளார்.
ஆனால், அக்ஷரா ஹாசனின் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம் பூக்களோடு வடிவமைக்கப்படும் ஆடைக்கு ஏற்ப இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் ரீனா தெரிவித்தார்.