தெலுங்கு இயக்குனரால் புலம்பித் தள்ளும் அனுஷ்கா
ஹைதராபாத்: அனுஷ்காவின் பாலிவுட் கனவுக்கு இப்படி ஒரு தடை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
தெலுங்கில் கொடி கட்டிப் பறந்த இலியானா மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு பாலிவுட்டுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரை அடுத்து தமன்னாவும் பாலிவுட்டில் செட்டிலாகும் முயற்சியில் இறங்கிவிட்டார். அவர் நடித்த ஹிம்மத்வாலா ஓடாவிட்டாலும் அடுத்த ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்.
இந்நிலையில் இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தமன்னாவை பார்பி பொம்மை என்று புகழ அனைவரின் பார்வையும் அவர் மீது விழுந்துள்ளது. இலி, தமன்னா பாணியில் பாலிவுட் செல்ல விரும்புகிறாராம் அனுஷ்கா.

பாலிவுட்டை குறி வைக்கும் அனுஷ்கா
தெலுங்கு படங்களில் நடித்தால் பாலிவுட் வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் ஆந்திராவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார் அனுஷ்கா.

ராஜமவுலி படம் கிடைத்தது
நான் ஈ படத்தை எடுத்த இயக்குனர் ராஜமவுலி பிரபாஸை வைத்து தனது கனவு படம் ஒன்றை இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் அனுஷ்கா தான் ஹீரோயின்.

சோனாக்ஷி
இந்தியில் சோனாக்ஷி சின்ஹா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் நினைக்கிறாராம். இந்தியிலும் தன்னையே ஹீரோயின் ஆக்குவார் என்று நம்பியிருந்த அனுஷ்கா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்பித் தள்ளுகிறாராம்.


Click it and Unblock the Notifications